28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
123
ஆரோக்கியம் குறிப்புகள்

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

இரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபினின் அடர்த்தி குறைவதே இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த இரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்து விடுகிறது. மேலும் மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன.

இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்தசோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது. இரத்தசோகையின் அறிகுறிகள்

1. மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
2. சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்துக் காணப்படுதல்.

3. முகத்தில் வீக்கம் உண்டாதல், நகங்களில் குழி விழுதல்.
4. கண் குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்.
5.உடல் நலம்சரியில்லாதது போன்ற உணர்வு.
6. மூச்சுவிடுவதில் சிரமம்.
7. இதயம் வேகமாகத்துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது. 8.குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை.

இரத்த சோகையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பிரசவம்:
கர்ப்பமான பெண்களுக்கு இரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின்போது பொதுவாகவே அதிக இரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே இரத்தசோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு இரத்தசோகை இருந்தால் குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கும் இரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

சோர்வு:
இரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதே அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையே அவர்களால் கவனிக்க முடியாமல் போகக்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாக ஒருவர் தீவிர மன அழுத்த நோயாளியாகும் வாய்ப்பும் இருக்கிறது. நோய்க்குள்ளாகும் வாய்ப்பு: ஆரோக்கியமானவர்களைவிட, இரத்தசோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். இரத்தசோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால், அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம் அதிகமாக இரத்தத்தை "பம்ப்" செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்கக்கூடும். இரத்தசோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில் உடலில் இருப்பது அவசியம். மருத்துவம் உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்காக இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. வலிநிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளாலும் ரத்தசோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்யவேண்டும்.

இத்தகைய இரத்தசோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் இரத்தம் விருத்தி அடைந்து, இரத்தச்சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.
123

Related posts

கொரியர்களின் அழகிய சருமத்திற்கு காரணம் அவர்களின் இந்த ரகசிய அழகு குறிப்புகள்தானாம் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு இலை சாப்பிட்டால் போதும்.. உயிரை பறிக்கும் கொடிய நோய்களை விரட்டி விடலாம்!

nathan

புற்றுநோய் வராமல் இருக்க அன்றாட பழக்கவழக்கங்களை கடைப்பிடிங்க!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலில் பொறுமை என்பதே கிடையாதாம்…

nathan

குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்த பெற்றோர் அடக்குமுறை பின்பற்றலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த 5 ராசிக்காரங்க அனைவர் மீதும் உண்மையான அன்பு வைக்கிறவங்களா இருப்பாங்களாம்…

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த ராசிக்காரங்களாம் கருப்பு கயிற்றை கையில் கட்டக்கூடாது..

nathan