22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
17 1500271271 1
மருத்துவ குறிப்பு

இறந்த தாயின் வயிற்றிலிருந்து 123 நாட்கள் கழித்து உயிருடன் பிறந்த ட்வின்ஸ்!

சில்வா ஜம்போலி என்ற 21வயது பெண்மணி கடந்த அக்டோபர் மாதம் இரண்டாவதாக கருவுற்றிருந்தார் அதே நேரத்தில் அவருக்கு பக்கவாதமும் தாக்கியது. பக்கவாதத்திற்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டே வயிற்றில்குழந்தையையும் சுமந்து கொண்டிருந்தார் சில்வா.

கடைசி நாட்கள் : ஒரு நாள் வீட்டில் தனியாக இருந்த சில்வாவிற்கு உடல்நலக்குறைவு அதிகரித்து மிகவும் ஆபத்தான கட்டத்திற்கு சென்று விட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கே மருத்துவர்கள் சில்வா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தனர். எல்லாரும் கவலையுடன் சில்வாவின் இறுதி காரியங்களை கவனிக்க, அப்போது தான் சில்வாவின் வயிற்றில் 9 வாரக் கரு இருந்தது நினைவுக்கு வந்தது.

துடித்த இதயங்கள் : இதை, மருத்துவர்களிடம் தெரிவித்தனர். அவர்களும் குழந்தை இறந்துவிடும் என்றே நினைத்தனர். கடைசி முயற்சியாக ஸ்கேன் செய்து பார்த்த போது, ட்வின்ஸ் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் இருவரும் நல்ல அரோக்கியத்துடன் இருப்பதாகவும் கண்டுபிடித்தனர். பின்னர் இந்த குழந்தைகளுக்காக மூளைச்சாவு அடைந்த சில்வாவை உயிருடன் வைத்திருக்கலாம் என்று முடிவு செய்தனர். சுமார் 123 நாட்கள் மூளைச்சாவு அடைந்த தாயின் வயிற்றிலேயே இருந்த குழந்தைகள் கடந்த பிப்ரவரி மாதம் குறைப் பிரசவமாக ஏழாம் மாதத்திலேயே சிசேரியன் மூலம் உலகிற்கு வந்தனர்.

மருத்துவ வரலாறு : மூளைச்சாவு அடைந்த ஒரு நபரை சுமார் 123 நாட்கள் வரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் இதயத்தை துடிக்க வைப்பது என்பது இதுவே முதன் முறை. உலகளவில் இவ்வளவு நீண்ட நாட்கள் யாரும் மருத்துவ உதவியுடன் உயிருடன் இல்லை.

அம்மாவும்…. இரட்டைக் குழந்தைகளும் : இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இவ்வளவு நாட்கள் அவரது இதயத்தை துடிக்க வைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது, தாயுடன் சேர்த்து இரண்டு குழந்தைகளும் வயிற்றில் இருப்பது தான் பெரிய சிக்கல். உடலில் செல்லும் ஆக்ஸிஜன் அளவு,ரத்த ஓட்டம் அளவு, அதோடு உடலில் உள்ள மற்ற சத்துக்கள் எல்லாம் சரியான அளவில் இருக்கிறதா? ஹார்மோன் பேலன்ஸ் எப்படி இருக்கிறது என 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டேயிருந்தோம். அதோடு ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்காணித்தோம். இறுதியாக சிசேரியன் மூலம் இரண்டு குழந்தைகளை பார்த்தவுடன் தான் நிம்மதி பிறந்தது என்றனர்.

17 1500271271 1

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!!

nathan

நாக்கில் வெண்படலம் தீர்வு என்ன?

nathan

சூப்பர் டிப்ஸ்! இந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்

nathan

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்

nathan

இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக் கொள்கிறவர்கள் கவனிக்க! தெரிஞ்சிக்கங்க…

nathan

தோள்பட்டை வலி அதிகமா இருக்கா? இதோ எளிய நிவாரணம்

nathan

சுவாச நோய்க்கான சித்த மருந்துகள்

nathan

ஷாப்பிங் மேனியா : அடிக்கடி ஷாப்பிங் செய்வதும் உளவியல் சிக்கல்தான்!

nathan

உங்களுக்கு தெரியுமா அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்களும் அவர்கள் தவிக்க வேண்டிய உணவுகள்

nathan