hqdefault
ஆரோக்கியம் குறிப்புகள்

திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

திருமண கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து புதிய வீட்டில் அடியெடுத்து வைக்க போறீங்களா? உங்கள் புகுந்த வீட்டில் புதிய விதிமுறைகள் எல்லாம் இருக்கும், சிலவற்றை நீங்கள் அனுசரித்து போக வேண்டியிருக்கும்.

பலர் திருமணத்திற்காக உடல் எடையை குறைத்திருப்பீர்கள். ஆனால் சில காரணங்களால் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்துவிடும். நீங்களே பெரும்பான்மையான பெண்களை கண்டிருப்பீர்கள், திருமணத்திற்கு முன்னர் துரும்பு போல இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு குண்டாகிவிடுவார்கள்.

1. டயட் இல்லை!

நீங்கள் திருமணம் முடிந்து நிறைய விருந்துகளுக்கு செல்வீர்கள். அங்கு நிறைய சாப்பிட சொல்வார்கள், பின்னர் தேன்நிலவு செல்வீர்கள், நிச்சயம் வெளியிடங்களில் தான் சாப்பிட்டாக வேண்டும். இதனால் நீங்கள் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வீர்கள். 2. மன அழுத்தம்

2. மன அழுத்தம்

உங்களுக்கு புது வீட்டில் சில மன அழுத்தம், பயம் இருக்கும் அதனுடன் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்துவிடும். மேலும் விட்டமின் குறைப்பாடுகளும் உங்களது உடல் எடை அதிகரிக்க காரணமாகும்.

3. சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம்

சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் நீங்கள் உங்களது வீட்டில் ஒரு மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடித்திருப்பீர்கள், ஆனால் உங்களது புகுந்த வீட்டில் வேறு மாதிரியான உணவு பழக்கம் இருக்கும். அவர்களை கவர்வதற்காக நீங்கள் புகுந்த வீட்டு உணவு பழக்கத்திற்கு மாறிவிடுவீர்கள். இதனால் உடல் எடை கூடும்.

4. வெளியில் சாப்பிடுதல்

வெளியில் சாப்பிடுதல் திருமணமான புதிதில் அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என அனைவரும் வீட்டிற்கு அழைப்பார்கள். வார இறுதியில் அல்லது வார நாட்களில் கூட வெளியில் சாப்பிடுவீர்கள். வெளியில் சாப்பிடும் உணவுகளில் அதிக கலோரிகளும், குறைந்த சத்துக்களும் இருக்கும். இதனால் உடல் எடை கூடும்.

5. உங்க சாய்ஸ் இல்லை!

உங்க சாய்ஸ் இல்லை! திருமணத்திற்கு முன்னர் உங்கள் வீட்டில் உங்களுக்கு பிடித்தது போல சாப்பிடுவீர்கள். திருமணத்திற்கு பிறகு உங்களது கணவருக்கு பிடித்த உணவுகளை சமைப்பீர்கள். மிச்சமாகிவிட கூடாது என்று நீங்கள் அதிகமாக சாப்பிட்டுவிடுவீர்கள்.

6. கவனக்குறைவு

கவனக்குறைவு திருமணத்திற்கு முன்னால் நீங்கள் அழகாக தோன்ற வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என சில விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அதை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். இதனால் உங்களது உடல் எடை அதிகரித்துவிடும்.hqdefault

Related posts

பெண்களே இந்த 9 கண்ணுல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தின இரகசியம் நாங்க சொல்றோம்!

nathan

தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை

nathan

உங்களுக்கு தெரியுமா தயிருடன் இதை கலந்து தேய்த்தால் இரண்டே நாட்களில் அந்த பிரச்சனை காணாமல் போய்விடும்!

nathan

நுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்!

nathan

நம்முடைய பயணம் ஆறாத வலியையும், வடுவையும் தராது இருக்க கட்டாயம் இத படிங்க!….

sangika

ஆண்கள் ஏன் மனைவியை விட்டு விலகிப் போகின்றார்கள் தெரியுமா ?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

உடல் எடையை குறைக்கும் முட்டை!….

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தை நன்றாக தூங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுங்க..!

nathan

குளிர்காலத்தில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்க டிப்ஸ்…!

nathan