டைவதில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள் படும் அவதி லேசு பட்டதல்ல. கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு, கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருப்பதற்கு, பிரசவம் சுலபமாகவும், வேகமாகவும் நடப்பதற்கு, பெண்கள் ஆரோக்கியமானதை உட்கொண்டு உடலுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.
உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், சுலபமான பிரசவத்திற்கும் நீங்கள் செய்ய வேண்டியது – உடற்பயிற்சியில் ஈடுபடுவது.. கர்ப்பிணி பெண்களுக்காக தனிப்பட்ட உடற்பயிற்சிகள் இருக்கிறது. அதனை செய்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள்.
திடமான அடிவயிறு உங்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பாக அமையும். உங்கள் அடிவயிற்றை திடமாக வைத்துக் கொள்ள எளிமையான மற்றும் பாதுகாப்பான கர்ப்ப கால உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்கள் முதுகிற்கும் தக்க பாதுகாப்பை அளிக்கும். ஆனால் அதோடு நிறுத்தி விடாதீர்கள். வயிற்றுக்கான உடற்பயிற்சியோடு மட்டுமல்லாது, வேறு சில உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.
சிறிது தூரம் நடை உங்கள் வலியையும், அழுத்தத்தையும் போக்கும். கர்ப்ப காலத்தின் போது எந்த சிசுக்களின் தாய்மார்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்களோ, அவர்களின் குழந்தைகள் எல்லாம் ஆரோக்கியமான எடையோடு பிறக்கும். மேலும் பிரசவமும் சுலபமாகும்.
அதேப்போல் பிரசவத்தினால் ஏற்படும் அழுத்தமும் வேகமாக குணமடையும். கர்ப்ப காலத்தின் போது உடற்பயிற்சியில் ஈடுபட்டால், பிரசவம் வேகமாக நடப்பதற்கும் மருத்துவ தலையீடுகள் (சிசேரியன் உட்பட) இல்லாமல் சுலபமான பிரசவம் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.