நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது.
தாலி என்பது ஒரு புனித நூல். இதை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்க வேண்டும்.
தற்சமயம், அந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை. தாலி என்ற பெயரில் தடிமனான தங்கச் சங்கிலி போடப்படுகிறது. நூலில்தான் தாலி இருக்கவேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்கவேண்டும். இந்த நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்திநிலைகளைப் பயன்படுத்தி, தாந்திரீக வழியில் உருவாக்கப்படுகிறது.
அதாவது, ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் (சக்திநிலை) பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் பயன்படுத்தி, அந்த புனிதநூல் ஒரு குறிப்பிட்ட வழியில் தயாரிக்கப்பட்டு பிறகு அணிவிக்கப்படும்.
அதன் பிறகு அந்த ஆணும் பெண்ணும் உடலளவில் இணையும்போது அது அந்த இரு உடல்களின் இணைப்பு மட்டுமல்ல.
அந்த இருவரின் சக்திநிலையும் பின்னிப் பிணைந்த சங்கமமாக இருக்கும். இந்த இருவரின் சக்திநிலைப் பிணைப்பு சாதாரணமானதல்ல.
அப்படி உருவாக்கப்படும் இணைப்பை, உறவை சாதாரணமாக முறிக்க முடியாது. அப்படியும் வலிய முறித்தால் அந்த குறிப்பிட்ட இருவருக்கும் மிக மோசமான விளைவுகள் உண்டாகும். இப்படித்தான் முங்காலத்தில் விவாகங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த உறுதியான பிணைப்பு கணவன் – மனைவி இருவருக்கும், ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுத்தது.
அந்த சக்தி சமநிலையுடன் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது.
இவர் தன்னைவிட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்பட வில்லை.
அந்த அளவிற்கு அவர்களிடம் உறுதியான பிணைப்பு இருந்தது. இன்றைய காலகட்டத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை இந்தியாவிற்கு மிக மிகப் புதிது.
கணவன் என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ, மனைவி என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற உணர்வுகள் முன்பு இருந்ததில்லை. ஆனால், தற்போது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகிவிட்டது.
நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து எப்படி ஒரே சக்தியாகப் பணிபுரிகிறார்கள் என்பதையும், அப்போது அந்தப் பணி எவ்வளவு சக்தியுடன் நடக்கிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
வாழ்க்கையில் நாம் செய்ய நினைப்பதை பயமோ, பாதுகாப்பற்ற தன்மையோ இன்றி உறுதியுடன் செய்து முடிக்க முடியும். இதற்காகத்தான் திருமணம், தாலி எல்லாம் உருவாக்கப்பட்டது.
Related posts
Click to comment