28.6 C
Chennai
Monday, May 20, 2024
21 1487655028 5 donotusehotandcoldwater
முகப் பராமரிப்பு

தினமும் நைட் படுக்கும் முன், இந்த க்ரீம்மைத் தடவினால், சீக்கிரம் வெள்ளையாகலாம்!

ஒவ்வொருவருக்கும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகத் தான் கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் பலர் இதை வெளியே காட்டிக் கொள்ளாமல், மறைமுகமாக முயற்சிப்பார்கள். இருப்பினும், இப்படி கண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தான் பெறக்கூடும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை விரைவில் வெள்ளையாவதற்கான ஓர் எளிய வழியைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் சீக்கிரம் வெள்ளையாகலாம். சரி, இப்போது அந்த வழி என்னவென்று காண்போம்.

தேவையான பொருட்கள்: ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்

முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது கெட்டியான ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும்.

பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1 தினமும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள க்ரீம்மை முகத்தில் தடவ வேண்டும். மசாஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2 மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

21 1487655028 5 donotusehotandcoldwater

Related posts

தெரிஞ்சிக்கங்க…பளபளப்பான சருமத்திற்கு மயோனைஸ் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்…

nathan

இத குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக்கும்

nathan

முகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்

nathan

முகத்தை மசாஜ் செய்வது எப்படி

nathan

முகத்தில் சுருக்கங்களை போக்கும் பப்பாளிப் பழம்

nathan

பெண்களே வயதானாலும் இளமையாக காட்சியளிக்க சில டிப்ஸ்…

nathan

அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்

nathan

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan