28.1 C
Chennai
Friday, Dec 27, 2024
1495696945 6695
அசைவ வகைகள்

சிக்கன் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்…!

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
மிளகு – 10
மிளகுத் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வினிகர், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றம் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரைமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை வாணலியில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து, அதனை மூடி வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்துவிட்டால், அதனை இறக்கி கொத்தமல்லி தூவினால் சிக்கன் பெப்பர் ப்ரை தயார்.1495696945 6695

Related posts

சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

மட்டன் மிளகு கறி

nathan

திருநெல்வெலி மட்டன் குழம்பு:

nathan

தந்தூரி சிக்கன்,அசைவம், அசைவம், அறுசுவை, தந்தூரி சிக்கன்

nathan

முட்டை சில்லி

nathan

சத்தான கேரட் – முட்டை பொரியல்

nathan

சிக்கன் காளிப்ளவர்

nathan

மீன் குழம்பு

nathan

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan