26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்

ஞாயிற்றுக்கிழமைகளில் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால் சிக்கன் – முட்டை பொடிமாஸ் செய்யலாம். இந்த பொடிமாஸ் செய்முறையை பார்க்கலாம்.

சன்டே ஸ்பெஷல் சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்
தேவையான பொருட்கள் :

எண்ணெய் – தேவையான அளவு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/ 4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
முட்டை – 2
கொத்தமல்லி – சிறிதளவு

சிக்கனை வேக வைக்க :

சிக்கன் – அரை கிலோ
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

* சிக்கன் நன்றாக வெந்ததும் தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து ஆறவைத்து உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், உப்பு, 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கன் பொடிமாஸை சேர்த்து டிரையாக உதிரியாக வரும் வரை வதக்கவும்.

* இப்போது அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும்.

* சிக்கன் உதிரியாக பொடிமாஸ் போல் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

Related posts

சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி

nathan

சிதம்பரம் கொத்சு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் லட்டு

nathan

யுகாதி ஸ்பெஷல் பச்சடி செய்வது எப்படி

nathan

ஓட்ஸ் – கோதுமை ரவை ஊத்தப்பம்

nathan

சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

nathan

ருசியான அவல் போண்டா செய்வது எப்படி?!

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan