29.9 C
Chennai
Monday, Apr 28, 2025
1493279470 6663
மருத்துவ குறிப்பு

சிறந்த பீர் எது என எப்படிக் கண்டுபிடிப்பது? – சொல்கிறார் பீர் நிபுணர்

மதுவில் பல வகைகள் இருந்தாலும், உலகமெங்கும் உள்ள மது பிரியர்களில் பெரும்பாலனோர் அதிகம் குடிப்பது பீர் வகைகள்தான்…

தற்போது கோடைக்காலம் என்பதால் மதுக்கடைகளில் பீர் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. நம்மை விட மேலை நாட்டில் வசிப்பர்கள் அதிகமாக பீர் குடிக்கிறார்கள். ஆனால், அங்கு தயாரிக்கப்படும் பீர் வகைகள் சற்று தரத்துடன் தயாரிக்கப்படுகிறது.

1493279470 6663
இந்நிலையில், பீர் அருந்தும் ஏராளமானோருக்கு எது சிறந்த பீர்? எது தரமற்ற பீர்? என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது தெரியாது. எனவே சிறந்த தரமான பீரை எப்படி கண்டுப்பிடிப்பது என பிரதீப் கிட்வாணி என்ற பீர் நிபுணர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இரண்டு விஷயங்கள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும் என அவர் கூறுகிறார். ஒன்று நுகர்தல், மற்றொன்று சுவைத்துப் பார்த்தல்

நுகர்தல்:

அதாவது, முதலில் பீரை முகர்ந்து பார்க்க வேண்டும். நல்ல தரமான பீரில் பழங்களின் வாசனை இருக்கும். ஆனால், வேதிப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்ட பீரில் ப்ளேவர்-களின் வாசனை மட்டும் வீசும்.

அருந்திப் பார்த்தல்:

அடுத்து, பீரை எடுத்து ஒரு சிப் (முழுங்கு) குடித்து, நாவால் நிதானமாக சுவைத்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் தரம் மற்றும் தரமற்ற பீரின் சுவையை நாம் அறிய முடியும்.

எனவே, நுகர்ந்து பார்த்தல், அருந்திப் பார்த்தல் என்ற இரண்டு முறையிலேயே நல்ல பீர் எது, தரமற்ற பீர் எது என நாம் கண்டறியலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பீர் பிரியர்கள் இதை செய்து பார்க்கலாம்…

Related posts

மண்டையை பிளக்கும் வெயில்… பரவும் மஞ்சகாமாலை… தடுக்கும் வழிகள்!

nathan

THYROIDIN – தைரோடின்- செம்மறி ஆட்டுக் குட்டியின் தைராய்டு சுரபியிலிருந்து எடுக்கப்பட்டது.

nathan

பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாயை வீட்டிலேயே குணப்படுத்தும் உணவுகள் எது தெரியுமா?

nathan

மருதாணி இலையின் மகத்தான பயன்கள்

nathan

பெண்களுக்கு அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கேற்ற சிறந்த மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம் தெரியுமா ???

nathan

விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தேமலுக்கு இயற்கை மருத்துவம்

nathan