31.2 C
Chennai
Saturday, Jun 29, 2024
crack 04 1486204714
கால்கள் பராமரிப்பு

பாதங்களை மிருதுவாக்கனுமா? கருமையான வெடிப்புள்ள பாதங்களை காக்க இதோ டிப்ஸ் :

பாதத்தில் உண்டாகும் வெடிப்பும், சுருக்கமும் நமது பராமரிப்பின் அலட்சியத்தை காண்பிக்கும். பாதங்கள் அழகாய் இருந்தால் நமக்கு தனி மரியதையை தரும்.

நிறைய பேர் பாதங்களையும் கவனிக்க ஆரம்பிப்பார்கள். முகத்திற்கு முக்கியத்துவம் தந்த நீங்கள் பாதங்களுக்கு தரவில்லையென்றால் உங்களை குறைத்து மதிப்படுவார்கள்.

உங்கள் பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்திதான் பாருங்களேன்.

பீர்க்கங்காய் நார் : பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாத நகங்களின் அழுக்கை அகற்ற : பாத நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் எளிதில் போகாது. அவ்ரை பின் வைத்து எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக தீக்குச்சியின் கைப்பிடிக்கும் பகுதியில் நல்லெண்ணெயால் நனைத்து தீபத்தில் சூடு செய்து நக இடுக்கில் உள்ள அழுக்களை எடுத்தால் எளிதில் வெளிவந்துவிடும். நகங்களும் பளபளக்கும்.

காபிப் பொடி : காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்.

வெடிப்பு மறைய : விளக்கெண்ணெய் சிறந்த முறையில் பாதங்களில் உள்ள வறட்சியை போக்கும். விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால் கரைந்து விடும். இந்த கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும். வெடிப்பு காணாம் போய்விடும்.

கல் உப்பு : கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவுங்கள். இதனால் குதிகால் வெடிப்பு மறைந்து இறந்த செல்கள் அகன்று மென்மையாகும்.
crack 04 1486204714

Related posts

கை, கால் முட்டி கருப்பா இருக்கிறதா? இத ட்ரை பண்ணுங்க

nathan

பாதங்களையும் கொஞ்சம் பாருங்க!

nathan

செருப்பின் அச்சு உங்கள் பாதங்களில் தெரிகிறதா? இதை செய்து பாருங்க!!

nathan

உங்களுக்கு தெரியுமா முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது

nathan

அழகான பாதங்களுக்கு…

nathan

பாத வெடிப்பை மறைய வைக்கும் குறிப்புகள்

nathan

கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

nathan

கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika