27.4 C
Chennai
Thursday, Aug 7, 2025
unnamed file
ஆரோக்கிய உணவு

“மோர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா?”- இதோ இருக்கு செய்முறை..!

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மோர் இட்லி செய்யும் முறையை இங்கு தருகிறோம்..!

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு- தேவையான அளவு

கடைந்தெடுத்த மோர் – 2 கிளாஸ் (கெட்டியாக இருக்க வேண்டும்)

மோர் மிளகாய் வத்தல்- 10

சிவப்பு மிளகாய்- 5

கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

முதலில் இட்லியை தேவைக்கேற்ப அவித்துக் கொள்ள வேண்டும். இட்லிகளை சிறியதாக அவித்துக் கொள்வது நல்லது. பின்னர் அவித்த இட்லிகளை சூடு ஆறியவுடன் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

வெந்தயம், சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பக்கம் மோர் மிளகாய் வத்தலை, தனியாக பொறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கெட்டி மோரை இரண்டாக பிரித்து, ஒரு பகுதி மோரில் மிக்சியில் அரைத்த வெந்தயம்,மிளகாய் பொடியை கலந்துவிட வேண்டும். மற்றொரு பகுதி மோரில் ஒரு கிளாஸ் நீர் சேர்த்து ,அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை அரை மணி ஊற வைக்க வேண்டும். பின்னர் இட்லி துண்டுகளை எடுத்து,அதன் மேல் ஏற்கனவே இருக்கும் வெந்தயம்,மிளகாய் பொடி கலந்து மோரை ஊற்ற வேண்டும்.

பின்னர் பொறித்து வைத்திருக்கும் மோர் மிளகாயை நன்றாக நொறுக்கி அதன் மேல் தூவுங்கள். இறுதியாக கொத்தமல்லியை அழகுக்காக இட்லி மேலே தூவிவிட்டால், சுவையான மோர் இட்லி ரெடி.
மோர் இட்லி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு மட்டுமல்லாது, நல்ல காரமான பதார்த்தமும் கூட. இந்த இட்லியை ஸ்நாக்சாகவும் உண்ணலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.unnamed file

Related posts

சுவையான முருங்கைக்காய் மசாலா

nathan

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

nathan

ஒரு டீஸ்பூன் தேன் உருவாக்க, தேனீக்கள் படும் கஷ்டம் இவ்வளவா?!

nathan

மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்

nathan

எப்பவும் பழங்களை இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடாதீங்க…தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் சாப்பிட கூடாதவைகளும் சாப்பிட வேண்டியவைகளும்…!!

nathan

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். …..

sangika

பனீர் – பெப்பர் சூப்

nathan

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan