32.2 C
Chennai
Monday, May 20, 2024
24 1485241202 4 hair fall
தலைமுடி சிகிச்சை

செம்பருத்தி பொடியைக் கொண்டு தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

இன்றைய காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால், மாசடைந்த சுற்றுச்சூழலால் தலைமுடி பலவீனமாகி, உதிர ஆரம்பிப்பதுடன், பொலிவிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக நார் போன்று காணப்படும். தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, நெல்லிக்காய், செம்பருத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை

இப்போது நாம் அதில் செம்பருத்தியின் பொடியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என காணலாம். தற்போது நகர்புறத்தில் செம்பருத்தி செடியைக் காண்பது என்பது அரிதாக உள்ளது. எனவே நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் செம்பருத்தி பொடியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.

தலைமுடியின் வலிமையை அதிகரிக்க…
தலைமுடி பலவீனமாக இருந்தால் தான் உதிர ஆரம்பிக்கும். ஆகவே இதன் வலிமையை அதிகரிக்க, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் பாலுடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையாக இருக்கும்.

எண்ணெய் பசை நீங்க…
செம்பருத்தி பவுடர் நல்ல ஹேர் கிளின்சராகவும் பயன்படுகிறது. அதற்கு செம்பருத்தி பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறிவிடும்.

பொடுகு நீங்க…
வெந்தயத்தை இரவு முழுவதும் மோர் மற்றும் செம்பருத்திப் பொடியுடன் சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலையில் இக்கலவையை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகில் இருந்து விடுபடலாம்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க…
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு செரும்பருத்தி பொடியுடன், 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு ஊற வைத்து பின் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க…
செம்பருத்தி பூ மற்றும் இலையை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஆலிவ் ஆயில் மற்றும் நீர் சேர்த்து கலந்து, தலைமுடியின் முனை வரை தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

நரைமுடியைப் போக்க…
செம்பருத்தி பொடி மற்றும் மருதாணி பொடியை ஒன்றாக கலந்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து அலச, நல்ல பலன் கிடைக்கும்.24 1485241202 4 hair fall

Related posts

உங்களுக்கு தெரியுமா இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய குறிப்புகள்

nathan

ஹேர் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது -தெரிஞ்சிக்கங்க…

nathan

பொடுகு தொல்லைய போக்கி உங்க முடிய கருகருன்னு நீளமா வளர

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்களுக்கு முடி நீளமா வளரனும்மா? அப்ப இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்!!!

nathan

தலைமுடி உதிர்கின்றதா? இதோ இயற்கை வைத்திய முறைகள்

nathan