28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
201610271155324744 Whenever mothers should not breastfeed SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்மார்கள் குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள்.

மேலும், ஒவ்வொரு வாரமும், மாதமும் என குழந்தை பிறந்த முதல் இருவருடம் வரை எலும்பு நல்ல வலிமையடை வேண்டும் எனில், பாலின் அவசியம் அறிந்து, சரியான அளவில் பாலூட்ட வேண்டும் என்றும் அறிவுரைக்கப்படுகிறது. அதைப்பற்றி இனிக் காண்போம்.

முதல் 3 மாதங்கள் :

முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 – 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 – 12 முறை பாலூட்ட வேண்டும். ஓர் நாளுக்கு 250 – 700 மில்லி வரையிலான அளவு பாலூட்ட வேண்டும்.

3 வாரத்தில் இருந்து 3 மாதம் வரை :

ஒரு நாளுக்கு 80 – 120 மில்லி அளவு பால், 6 – 8 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 – 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.

3 – 6 மாதங்கள் :

மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை, 120 – 240 மில்லி அளவிலான பால், 4 – 6 முறை ஓர் நாளுக்கு ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஓர் நாளுக்கு 700 – 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.

6 – 9 மாதங்கள் :

ஒரு நாளுக்கு 170 – 240 மில்லி அளவு பால், 6 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.

9 – 12 மாதங்கள் :

ஒரு நாளுக்கு 200 – 240 மில்லி அளவு பால், 3 – 5 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.

12 + மாதங்கள் :

ஒரு நாளுக்கு 120 மில்லி அளவு பால் / சோயா பால், தயிர் 4 முறை ஊட்டலாம்.201610271155324744 Whenever mothers should not breastfeed SECVPF

Related posts

கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை

nathan

35-வது வாரத்தில் குழந்தை பிரசவிப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… கர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா ?

nathan

கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்

sangika

கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை

nathan

கர்ப்பிணிகள் குடிப்பதற்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்

nathan

வலிப்பு நோய் வரும் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை

nathan

தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்

nathan

எதிர்பாராத விதத்தில் கருத்தரிக்கும் போது நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!!

nathan