26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
1488803123 7477
சிற்றுண்டி வகைகள்

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?….

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1கப்
அரிசி மாவு – 5 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி – 3/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 2 சிட்டிகை

காய்கறி மசாலா செய்ய:

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் – 3கப்
(காலிப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட்)
உரித்த பட்டாணி – 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 கப்
நசுக்கிய பச்சை மிளகாய் – 11/2டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
லெமன் – 1

செய்முறை:

நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி இஞ்சி – பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு வதக்கவும். ஈரம் நன்கு வற்றி காய்கறிக் கலவை ஒன்றுசேர்ந்து வரும்போது உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்யவும். சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா, மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல் மாவைத் தயாரிக்கவும்.

செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சூடான வெஜிடபிள் போண்டா தயார்.1488803123 7477

Related posts

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

சூப்பரான கோதுமை பாஸ்தா

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

கம்பு உப்புமா

nathan

பனீர் சாத்தே

nathan

பலாப்பழம் பர்பி

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…. மிகவும் பிடிக்கும்

nathan

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan