பருவமடைந்த பெண்களுக்கு வரும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் இதை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. பருவம் அடையும் வயதிலும், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னர், கருவுற்றிருக்கும் போது வெள்ளை படுவது சாதாரண விஷயம். முட்டை உருவாகும் நேரத்திலும் ஐந்து நாட்களுக்கு வெள்ளை படுதல் இருக்கலாம். இவை தானாக சரியாகிவிடும்.
விளைவுகள் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடலாம் அல்லது குறையலாம். அடிவயிற்றில் கனமான உணர்வு இருக்கும். நிதானமாக யோசித்து முடிவு எடுக்கும் திறன் இருக்காது. இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டால், அது சிறுநீரக பாதையை பாதித்து, சிறுநீரகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும், கருப்பையில் உள்ள நீண்ட நாள் புண்களால் வெள்ளை படுதல் இருந்தால், இது பின்னாளில் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சிகிச்சை மூலம் குணமாக்க வேண்டியது அவசியம்.
இங்கே சில பாட்டி வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வெள்ளை படுதல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
#1 உளுந்து, பார்லி இரண்டிலும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம்.
#2 சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும்.
#3 சுத்தம் செய்யப்பட்ட ஆகாயக் கருடன் கிழங்கு, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில் இரண்டு கிராம் அளவுக்கு வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம்.
#4 அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் ஆகியவற்றில் தலா 20 கிராம் எடுத்து தட்டிச் சாறு பிழிந்து அதில் படிகார பஸ்பம் ஒரு கிராம் கலந்து குடிக்கலாம்.
#5 சிவப்பு நிற தண்டுக் கீரைத் தண்டுடன் துத்தி இலையை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.
#6 கீழா நெல்லி இலை, கோவை இலை, அசோகமரப்பட்டை, நாவல்பட்டை அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மோரில் கலந்து குடிக்கலாம்.
#7 சாணாக்கி கீரையுடன், சீரகம் சிறிதளவு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.
#8 அருகம்புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
#9 எலிக்காதிலையுடன் கடுக்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.