28.1 C
Chennai
Sunday, Nov 17, 2024
iz3e0Rt
சைவம்

தேங்காய் பால் பிரியாணி

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 1
கேரட் – 1
பீன்ஸ் – 10
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
தடித்த தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர்- 1 கப்
உப்பு – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்

அரைக்க…

பட்டை – 2
பெருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
இஞ்சி – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5

எப்படிச் செய்வது?

ஜார் ஒன்றில் பட்டை, பெருஞ்சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். பாசுமதி அரிசி எடுத்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து அதில் சிறிது உப்பு தூவி பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பின்னர் மஞ்சள் தூள், கேரட், பீன்ஸ், சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி தேங்காய் பால் சேர்க்கவும். பின் தண்ணீர் சேர்த்து மூடி கொண்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். தேங்காய் பால் பிரியாணி தயார்!!!iz3e0Rt

Related posts

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

பாகற்காய் புளிக்குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்

nathan

சுவையான காளான் ரோஸ்ட்

nathan

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

nathan

குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன்

nathan

மணத்தக்காளி விதை காரக்குழம்பு

nathan

பச்சை பயறு கடையல்

nathan