28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201705251431276988 menstrual problem suddenly Body weight increase SECVPF
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு

பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் உடல் எடையை அதிகப்படுத்தும். இது எதனால் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு
பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் உடல் எடையை அதிகப்படுத்தும். இது எதனால் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதற்கு குடும்ப சூழ்நிலை உணவு கட்டுப்பாடு இன்மை சுற்றுசூழல் போன்ற காரணங்களை சொல்லலாம்.

இப்போது இருக்கிற அதிகப்படியான உஷ்ணம், மழையின்மை, கம்ப்யூட்டரில் இரவு பகல் பாராமல் உட்காருவது, ஏசியில் உட்காருவதால் தூய்மையான காற்று நம் உடம்பில் படாமல் இருப்பது, நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் யூரியா போன்ற உரங்களை போட்டு வளர்ப்பது, பழங்களை கல், கெமிக்கல் போட்டு பழுக்க வைப்பது போன்ற காரணங்களால் நாம் சாப்பிடும் உணவுகளில் சக்தியில்லாமல் போய் விடுகிறது. அதே போன்று அந்த காலத்தில் கிணற்று நீர், ஆற்று நீர், ஊற்று நீர் என்று ஆரோக்கிய நீரை குடித்து ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்போது கெட்டநீர் கிடைப்பது அதிகமாகி பணம் கொடுத்து நீரை வாங்குவது கூட கஷ்டமாக உள்ளது.

ஆக பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் பரம்பரை வாகு, உணவு, நீர், சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் வருகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். மேலும் மாதவிடாய் ஒழுங்காக வராததற்கு காரணம்

1. தைராய்டு பிரச்சினை
2. பைபராய்டு (கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள்)
3. நீர் கட்டிகள் (பாலிஸ்டிக் ஒவரி)
4. ரத்தமின்மை

தைராய்டு: கழுத்தில் உள்ள தைராய்டு கிளான்ஸ் அதிகமாகவோ, குறைவாக சுரப்பது தான் தைராய்டு பிரச்சினை. இதனால் மாதவிடாய் சரியாக வராது. மாதவிடாய் சரியாக வராததால் உடல் எடை அதிகமாகிவிடும். தைராய்டு பிரச்சனையால் முடி கொத்து கொத்தாக கொட்டும். மனசிதைவு அதிகமாகும். டென்ஷன், கோபம் அதிகமாகும். குரல் கம்மியாகி பேச முடியாமல் போகும். பெண்களுக்கு ஆண்குரல் போல் மாறும். மாதவிடாய் சரியாக வராது.

பைபராய்டு (கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள்) : மேலே சொன்ன பிரச்சினைகள் வரும்போது ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த டெஸ்டில் குறைவாகவோ அதிகமாகவோ தைராக்சின் சுரந்தால் மருத்துவர் சொன்ன மருந்தை எடுக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை டெஸ்ட் எடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி குறைவாகவோ, அதிகமாகவோ மருந்து எடுக்க வேண்டும். சொன்னால் அதன்படி செய்ய வேண்டும்.

சிலபேர் ஒருமுறை தைராய்டு டெஸ்ட் எடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுப்பார்கள். 3 வருடங்கள் அதே மருந்தை எடுப்பார்கள் இதனால் மாத்திரையின் பக்க விளைவு தான் அதிகமாக வரும். அதனால் தைராய்டு பிரச்சினைக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை டெஸ்ட் எடுப்பது நல்லது. குறைந்தால் மருந்தை நிறுத்துவது நல்லது. குழந்தை பிறக்காததற்கு முக்கிய காரணம் தைராய்டும் ஒரு காரணமாகும்.

நீர் கட்டிகள் (பாலிஸ்டிக் ஒவரி): ஹார்மோன் பிரச்சினையால் கர்ப்பபையில் நீர்கட்டிகள், பைபராய்ட் கட்டிகள் உண்டாகும். இதனாலும் மாதவிடாய் சரியாக வராது. இதனால் உடல் எடை அதிகமாகும். இந்த கட்டிகளும் குழந்தை பிறக்காததற்கு ஒரு காரணம்.
மேலே கூறிய காரணங்களை சரியாக கண்டுபிடித்து மூலிகை மருந்து, மூலிகை உணவு போன்றவற்றை எடுத்து முத்திரைகள் , அக்கு டச், நடை பயிற்சிகள் செய்து 100 சதவீதம் சரியாகி எடை குறைக்கலாம்.

ரத்தமின்மை (அனிமிக்): ரத்தம் குறையும் போது உடலில் நீர் கோத்து (ரத்தத்திற்கு பதில் உடல் முழுவதும் குத்து வலி வரும். உடல் எடை அதிகமாகும். தலைமுடி கொத்து கொத்தாக கொட்டும். ரத்தம் இன்மையால் மாத விடாய் வராது. உடல் எடை கூடும். இந்த ரத்தம் இன்மையை உணவு, பழங்கள், நடைபயிற்சி மற்றும் அக்குடச், அக்கு பிரஷர், மூலிகை மருந்து மூலம் ரத்தம் 100 சதவீதம் ஏறும்.

ரத்தம் குறைவதால் பின்காலத்தில் பலதரப்பட்ட வியாதிகள் வரும். சிறுநீரக கோளாறு வரும் போது ரத்தத்தில் யூரியா, கிரியேட்டின் அறை அதிகரித்து ரத்த அளவு மிகவும் குறையும். புற்றுநோய் தாக்குதலின் போதும் மிகவும் குறையும். இதனால் சிறுவயதிலிருந்தே ரத்த விருத்திக்கு புஷ்டியான உணவு உயற்பயிற்சி செய்யும் போது பிற்காலத்தில் ரத்த பாதிப்பு வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும் முதல் நிலை நோயும், ரத்தத்தில் சில பொருட்களின் அளவு குறைந்து போதல் மற்றும் இல்லாமல் போதல் என்ற இரண்டாம் நிலை நோயும், வந்து இந்த இரண்டு நிலை நோய்களும் சரியான மருத்துவத்தை பயன் படுத்தாமல் தவறான மருத்துவத்தை பயன்படுத்துவதால் தான் மூன்றாவது நிலை நோயான ரத்தத்தின் அளவு குறையும் நோய் வருகிறது.

எப்போது ரத்தத்தின் அளவு குறைகிறதோ! அப்போது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான ரத்தம் கிடைக்காதலால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். இனி ரத்தத்தை எப்படி அதிகரிக்க வைப்பது என்பதை பார்க்கலாம். சரிவிகித உணவை சாப்பிட வேண்டும், பழங்களில் தினமும் பப்பாளி, மாதுளம் பழம், ஆப்பிள், பேரிச்சம்பழம், அத்திபழம், நெல்லிக்காய், கொய்யாப் பழம், போன்ற பழங்கள் கலந்த கலவையாகவும் சாப்பிடலாம்.

1. ஆப்பிள் : தினமும், ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் அவசியமில்லை என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உள்ளது. ஆப்பிள் பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டது. இதிலுள்ள பெக்டின் எனும் பொருள் நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த சோகைக்கு ஆப்பிள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதில் உள்ள இரும்புச் சத்து பாஸ்பரஸ், ஆர்சனிக். ரத்தத்தை விருத்தி செய்கிறது. உணவுக்கு அரைமணிநேரம் முன்பும் படுக்கைக்கு செல்லும் முன்னும் ஒரு டம்ளர் ஜுசை சாப்பிடும் போது ரத்த சோகை போகிறது. இதே மாதிரி மாதுளம் பழம் நீறும் ரத்தம் விருத்தி அடைகிறது.

2. பேரிச்சை: மிகவும் அதிக சத்துள்ள பழம், இயற்கை யான குளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருட்கள் அடங்கியுள்ளது. கரும்புச்சாறை விட சிறந்தது. அதிரடியாக 1 மாதத்தில் ஒரு யூனிட் இரத்தம் அதிகரிக்க கீழேயுள்ளதை செய்யுங்கள். 1/4 கிலோ பேரிச்சம் பழம் கொட்டை நீக்கி ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும், அதில் 1/4 கிலோ சுத்தமான தேனை ஊற்றவும், 1 டப்பி குங்குமபூவை தூவவும் இக்கலவையை காலை இளம் வெயிலில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து பாட்டிலில் போடவும் இரவு சாப்பாட்டிற்கு பிறகு 2 பேரிச்சம் பழம் சாப்பிட்டு 1 டம்ளர் பால் சாப்பிடவும், (பசும் பால் மிகவும் நல்லது).இது முடிந்த பிறகு அத்திபழத்தை தேனுடன் கலந்து, அதையும் இரவு இரண்டு பழமும் பாலும் சாப்பிடவும்.

நிச்சயம் 1 மாதத்தில் ஒரு யூனிட் இரத்தம் அதிகரிக்கும். மாதவிடாய் பிரச்சினை போய் எடை குறைய தினமும் காலையும் மாலையும் 10 அடிக்கு நடைப்பயிற்சியும், இயற்கை உணவும், நில முத்திரை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

சிட்கா வைத்தியம் :

ஆரோக்கியமான குழந்தை பிறக்க:

கணவன் – மனைவி இருவரும் இரவு உணவுக்குப்பின் பழுத்த செவ்வாழைப்பழம் (இயற்கை முறையில் பயிரிடப்பட்ட) ஆளுக்கு ஒன்று சாப்பிட்டு ஒரு தம்ளர் பாலில் குங்குமப்பூ போட்டு சாப்பிடவும், ஆண்களுக்கு விந்து அதிகப்படுத்தியும், பெண்களுக்கு கர்ப்பப்பை பலம் ஆகியும் விரைவில் குழந்தை பிறக்கும்.

சிவப்பணுக்கள் அதிகரித்து ரத்த புஷ்டி உண்டாக:

ஒரு ஆப்பிள் பழத்தை நன்றாக வெந்நீரில் கழுவி (மெழுகு போய்விடும்) துண்டாக வெட்டி அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டால் ரத்த புஷ்டி உண்டாகும். (ஆப்பிளை வெட்டி வைக்கும் போது அது கறுப்பாக மாறி அதில் இரும்புசத்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)201705251431276988 menstrual problem suddenly Body weight increase SECVPF

Related posts

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களின் சிறுநீர் தொற்று தாம்பத்ய உறவைப் பாதிக்குமா?

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் வைட்டமின் குறைபாட்டை தான் குறிக்கிறது என்பது தெரியுமா?படிங்க!

nathan

மழைக்கால நோய்கள்: டெங்கு முதல் டைபாய்டு வரை

nathan

காசநோய் பிரச்னைக்கு புதிய தீர்வை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்!

nathan

நீர்க்கட்டிகள் நோய் அல்ல!

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடி வெறும் அழகுக்காக மட்டுமில்ல… இதுல இவ்ளோ மருத்துவ சக்தி இருக்கு…

nathan