24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201705221208356470 Bra beauty. L styvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்

இன்று பெண்களை கவரும் வகையில் சரியான அளவு, ஏராளமான வண்ணங்கள், பாதுகாப்பு, நம்பிக்கை, சவுகரியம் என எல்லாம் கலந்த கலவையாக கச்சிதமாக பிராக்கள் வடிவமைக்கப்படுகின்றன.

பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்
பெண்கள் ‘பிரா’ அணியும் வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. ஒரு நீண்ட துணியை மார்பில் கட்டி முதுகின் பின்னால் முடிந்து கொள்ளும் வழக்கம் அப்போதிருந்தது. அதுவே கொஞ்சம் மாறி ரவிக்கைக்குள் அணியும் சிறிய உடையாக (பிரா) மாறியது. அது அவர்களுக்கு அழகு, நம்பிக்கை, சவுகரியத்தை அளித்தது. அதனால் வரவேற்பு அதிகமானது. அனைவரும் அணிய தொடங்கியதால் ஆடை வடிவமைப்புபோலவே உள்ளாடை வடிவமைப்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

1889-ம் ஆண்டு மே 30-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ‘ஹர்மினி காடோலே’ முதன்முதலில் பிராவை வடிவமைத்தார். இது ஆடைக்குள் அணியும் உள்ளாடை என்பதால் அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எளிமையாக பயன்படுத்தும் வகையில் இருந்ததால் அனைவரும் விரும்பி வாங்கினார்கள். அழகுடன், பாதுகாப்பும் தந்த உள்ளாடைகள் ஒரு அத்தியாவசிய ஆடையாக மாறியது. அதனால் இன்று பல நிறுவனங்கள் உள்ளாடைகளை மட்டுமே வடிவமைத்து விற்பனை செய்கின்றன.

விக்டோரியா ராணி காலத்தில் அரசிக்கு உள்ளாடை வடிவமைத்தவர்கள் ‘கோர்ஸெட்ஸ்’ எனப்படும் கோட்டு போன்ற அமைப்புடைய மேலாடையை வடிவமைத்தார்கள். அதன் உட்புறத்தில் ஜாக்கெட் போன்ற அமைப்பைக் கொண்ட ஆடையின் பின்புறத்தில் பல நாடாக்கள் இருந்தன. அதனை இழுத்து பின்புறம் முடிச்சுபோட வேண்டும். ராணியின் குடும்பத்தினர் அணிவதை பார்த்து, அதே போன்று வடிவமைத்து பல பெண்கள் அணிய ஆசைப்பட்டார்கள். ஆனால் சாதாரண பெண்களுக்கு அந்த டிசைன் அசவுகரியமாக இருந்தது.

பின்னர் மெல்லமெல்ல பல மாற்றங்களை அடைந்து நவீன ‘பிரா’க்கள் வெளிவரத் தொடங்கின. இன்று சரியான அளவு, ஏராளமான வண்ணங்கள், பாதுகாப்பு, நம்பிக்கை, சவுகரியம் என எல்லாம் கலந்த கலவையாக கச்சிதமாக பிராக்கள் வடிவமைக்கப்படுகின்றன.

ஆரம்ப காலத்தில் கிராமப்புறங்களில் பெரும் சர்ச்சையை சந்தித்தது ‘பிரா’க்கள். அப்போது கிட்டத்தட்ட ஜாக்கெட்டின் பாதி அளவுடன் கூடிய மெல்லிய துணியால் வடிவமைக்கப்பட்டு முன்னால் முடிச்சுபோடும் விதத்தில் ‘பிரா’க்கள் இருந்தன. அளவில் குறைந்தது என்பதால் அதற்கு மேல் ஜாக்கெட் அணிய வேண்டும். பார்க்க கொஞ்சம் கவர்ச்சிகரமாக இருந்ததால் வெளிவேலைக்குச் செல்லும் பெண்கள் அத்தகைய பிரா அணிவதை விரும்பவில்லை.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் சில இடங்களில் பெண்கள் ஜாக்கெட் அணிவதையே எதிர்த்தார்கள். பிந்தைய காலங்களில் ஜாக்கெட் இல்லாமல் உடல் முழுவதும் புடவையை சுற்றிக்கொண்டார்கள். அதையே அன்றைய பெண்கள் சவுகரியம் என்று கருதியதால், அப்போது அறிமுகமான பிராக்கள் அதிக சர்ச்சைகளை உருவாக்கியது.

‘குடும்பப் பெண்கள் உள்ளாடை அணியக்கூடாது’ என்ற பிற்போக்கான வாதம்கூட அப்போது எழுப்பப்பட்டது. ஜாக்கெட் அணிவதுகூட தவறானது என்று பலர் பெண்களை தடுத்து நிறுத்தினர். அதில் உள்ள பாதுகாப்பை பற்றி யாரும் சிந்திக்கவில்லை. நகர்ப் புறத்திலிருந்து கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்டு போகும் பெண்களுக்கு இந்த உள்ளாடை, ஜாக்கெட் விவாதம் அப்போது பெரும் பிரச்சினையாக இருந்தது.

இன்றும்கூட நம் நாட்டில் உள்ளாடையை ஒரு ஒதுக்கப்பட்ட விஷயமாகவே சிலர் பார்க்கிறார்கள். பிராவை பலர் கண்ணில்படும்படி உலர்த்தக்கூடாது. ‘பிரா’ பட்டை ஜாக்கெட்டிற்கு வெளியே தென்படக்கூடாது. ஜாக்கெட் நிறத்திற்கு மாறான நிறத்தில் பிரா இருக்கக்கூடாது. வெள்ளை ஜாக்கெட்டுக்கு, கருப்பு பிரா அணியக்கூடாது. இப்படி பல விதமான பார்வைகள் உள்ளன.

இந்த உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தவறான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் உடல் நலமும் பாதிக்கப்படும். முதுகு வலி, தோள்பட்டை வலி, மூச்சுத் திணறல், உடல் எரிச்சல், அஜீரணக் கோளாறு போன்றவை அடிக்கடி ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் பொருத்தமற்ற பிராக்களும் காரணமாக இருக்கலாம். திரையில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் கூட உள்ளாடை விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

1990-ல் இது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ‘இது ஒரு சவுகரியமான உள்ளாடையாக இருந்தாலும் இதை எப்போதும் அணிந்து கொள்ளக் கூடாது’ என்று ஆய்வு முடிவை வெளியிட்டார்கள். ‘தொடர்ந்து இறுக்கமான பிராக்களை அணிந்தால், மார்பக தசைகளின் வளர்ச்சி தடைபடுகிறது. அதிக இறுக்கத்தால் தோல் வியாதிகள் உருவாகவும் வழி வகுக்கிறது. ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

அதனால் தேவையான நேரத்தில் மட்டும் அணிந்து கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டது. இது ஆரோக்கியம் சார்ந்த அறிவிப்பாகும். வியர்வை கசிவால் நோய் தொற்றுகளும் ஏற்படுகிறது. அதனால் சரியான அளவு உள்ளாடைகளை தேர்வு செய்து முறையாக அணிந்துகொள்ள பழக வேண்டும். ஆனால் நம் நாட்டில் இது பற்றி மற்றவரிடம் ஆலோசனை கேட்க தயங்குகிறார்கள்.

சரியான முறையில் பிரா அணிவது பற்றி “யூ-டியூபில்” வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை 10 லட்சம் பேர் அதை கண்டிருக்கிறார்கள். ஏதேனும் அசவுகரியம் என்றால் அது எதனால் என்று பாருங்கள். உங்கள் உடலமைப்பிற்கு எப்படிப்பட்ட ‘பிரா’வை தேர்வு செய்வது என்பதையும் வலைத்தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ‘பிரா’ என்பது அழகு, நம்பிக்கை, சவுகரியம், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. 201705221208356470 Bra beauty. L styvpf

Related posts

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளச் செய்யும் 10 முதன்மையான விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இவ்வளவு நன்மைகளா? கொலுசு அணியும் பெண்களே…!

nathan

இந்த டயப்பர் ரேஷஸஸ் சரியாகவே மாட்டேங்குதா?…

nathan

பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால்

nathan

நீங்க போன ஜென்மத்துல என்னவா பிறந்தீங்க-ன்னு தெரியணுமா?

nathan

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வியா?

nathan

வாஸ்து படி, உங்கள் வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் உங்களுக்கு நிறைய பணம் செலவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

nathan

எலுமிச்சை 7 பலன்கள்

nathan

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!…

sangika