28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1494933807 6498
ஆரோக்கிய உணவு

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தின் பயன்கள்!

வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீ தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்கள் வரை வெந்நீருடன் உட்கொள்ள வெள்ளைபடுதல் குணமாகும்.

முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கல்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முரை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.

நெல்லிக்காய் பொடியில் வந்தயப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து, கூந்தலை அலசி, பின் ஈரமான கூந்தலில் அந்த கலவையை தடவி, 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும். சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உட்ல எடையை குறைக்கச் செய்யும். தாய்ப்பால் சுரக்க வைக்கும். புற்று நோயை தடுக்கும். உடல் சூட்டிய தணிக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.1494933807 6498

Related posts

இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்

sangika

திராட்சை இந்த பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?அப்ப இத படிங்க!

nathan

சூப்பரான கேரட் கீர்

nathan

சுவையான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

nathan

மூளைக்குப் பலம் தரும் தாமரை!

nathan

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

ஆண்மையை பாதிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

nathan

கீரையின் உணவின் மருத்துவ குணம்

nathan