சைவம்

கத்தரிக்காய் வதக்கல்

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் – 1 கப் (நறுக்கியது)
இஞ்சி – 10 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
உப்பு, கருவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி

எப்படிச் செய்வது?

நீளமாக நறுக்கிய கத்தரிக்காயை நல்லெண்ணெயில் வதக்கவும். இஞ்சி, சீரகத்தை மைய அரைத்து, பாதி வதங்கிய கத்தரிக்காயுடன் சேர்க்கவும்; மஞ்சள் தூள், பெருங்காயம் கலந்து நன்கு கிளறவும். தோல் சுருங்கி, சதைப்பகுதி வெந்ததும் கருவேப்பிலையை தூவி அடுப்பிலிருந்து எடுக்கவும். கருவேப்பிலையை அரைத்தும் சேர்க்கலாம். சூடான கத்தரிக்காய் வதக்கல் ரெடி.

கத்தரிக்காயில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதன் தோலில் உள்ள ‘ஆன்த்தோ சயனின்’ எனும் வேதிப்பொருள் புத்துணர்ச்சியைத் தரும். உடலில் உள்ள நச்சுகளை வியர்வை மூலமாகவே வெளியேற்றிவிடும். அது மட்டுமின்றி புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் செயல்படும். இதன் சத்துக்கள் தோலில் ஏற்படும் சருமப் பிரச்னைகளைத் தடுத்து, தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

Related posts

சப்பாத்தி உப்புமா

nathan

சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்

nathan

வாழைப்பூ – முருங்கை கீரை வதக்கல்

nathan

சுவையான… பீட்ரூட் பொரியல்

nathan

பச்சை பயறு கடையல்

nathan

காரசாரமான கோவைக்காய் வறுவல் செய்வது எப்படி

nathan

தேங்காய் சாம்பார்

nathan

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

nathan

பூண்டு சாதம்

nathan