25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201705171130316355 how to make rajma soup SECVPF
சூப் வகைகள்

உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்

உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். ராஜ்மா சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும்.

உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்
தேவையான பொருட்கள் :

ராஜ்மா – 1/4 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
பூண்டு – 5 பல்,
பிரிஞ்சி இலை – 1,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

* ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 10 விசில் வரும் வரை வேக விடவும்.

* குக்கர் விசில் போனவுடன் அதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* ஃப்ரெஷ் க்ரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.

* சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி. 201705171130316355 how to make rajma soup SECVPF

Related posts

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

nathan

சுவையான தூதுவளை ரசம்

nathan

முருங்கை பூ சூப்

nathan

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

சத்தான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

ஜிஞ்சர் சூப்

nathan

சுவையான சிக்கன் சூப்

nathan

மைன்ஸ்ட்ரோன் சூப் (இத்தாலி)

nathan

சூப்பரான இறால் – காய்கறி சூப்

nathan