ஆபாச படங்களை பார்ப்பது ஆண்களை படுக்கை அறையில் பாதிக்கிறதாம். இது உங்களுக்கு விளையாட்டாக தோன்றலாம், ஆனால் உண்மையில் ஆபாச படங்களுக்கு அடிமையான ஆண்களின் செயல் திறன் படுக்கை அறையில் குறைகிறது.
ஆபாச வீடியோக்களின் தாக்கம்
ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அதிகம் பார்க்கும் ஆண்களின் விறைப்பு தன்மை ஒரளவிற்கு பாதிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இவ்வாறு ஆபாச படங்களை திரையில் பார்ப்பதன் மூலம் மகிழ்ச்சியடையும் ஆண்கள் உடலுறவில் அவ்வளவாக மகிழ்ச்சியடைவதில்லை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன
ஆண்கள் மற்றும் பெண்களிடம் அவர்களது பாலியல் செயலிழப்பு பற்றி விசாரித்த போது ஆண்கள் மட்டுமே தங்களது ஆபாச பழக்கவழக்கங்களால் அதிகளவில் செயலிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆபாச வீடியோ அடிமைகள் 20 வயது முதல் 40 வயது வரை உள்ள 300 ஆண்களிடம் நடத்திய ஆய்வில், நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே வாரத்தில் குறைந்தது ஒருமுறையும், 21.3 சதவீதத்தினர் வாரத்தில் மூன்றில் இருந்து ஐந்து முறையும் ஆபாச படங்களை பார்பதாக தெரிவித்தனர். 25 சதவீதத்தினர் அதற்கு முழுமையாக அடிமையாகிவிட்டனர் என்றும், 5 சதவீதத்தினர் வாரத்தில் ஆறிலிருந்து பத்து முறையும், 4.3 சதவீதத்தினர் 11 முறைக்கு அதிகமாகவும் ஆபாச படங்களை பார்ப்பதாக தெரிவித்தனர்.
பாலியல் உணர்வை அதிகரிக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் யூரோலஜி மற்றும் ஆண் இனப்பெருக்க சுகாதார இயக்குனரான டாக்டர் ஜோசப் அலுக்கல், "ஆபாச பட தூண்டுதல்கள் அடிக்கடி ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் உணர்வை அதிகரிக்கும்" என கூறியுள்ளார். இதனால், ஒவ்வொரு முறையும் கணவன் மனைவி இருவரும் ஆபாச படங்களை பார்ப்பதற்கு ஆசைப்படுவதால், உண்மையான உடலுறவில் மகிழ்ச்சி இல்லாமல் போகிறது.
பெண்களுக்கு பாதிப்பு குறைவு இந்த ஆய்வுகள், பெண்களுக்கு பிரச்சினை குறைவாக இருக்கலாம், ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல, பாலியல் செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுறவு என்பது பாதி உடல் சம்பந்தப்பட்டதாகவும், மீதி மனம் சம்மந்தப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே இது உங்களில் மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் பாலியல் பிரச்சனைகளுக்காக உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன், பாலியல் செயலிழப்பிற்கு காரணமான பிரச்சனைகளை மருத்துவர் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
சகிப்புத்தன்மை இல்லாமல் போகிறது டாக்டர் மேத்யூ கிறிஸ்டன், ஆபாச படங்களுக்கு அடிமையாகும் ஆண்கள், அதிகளவில் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு ஆளாகின்றனர் என்றும், அவர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் போகிறது எனவும் கூறியுள்ளார். மேலும் விறைப்பு தன்மை இல்லாமல் போதல் பிரச்சனைக்கு ஆபாச படங்களின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும் விறைப்பு தன்மை செயலிழப்பு பிரச்சனை வயதானவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. 40 முதல் 70 வயது வரை உள்ள ஆண்கள் விறைப்பு தன்மை செயலிழப்பு பிரச்சனைக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
உண்மையான உறவில் வெறுப்பு முந்தைய ஆய்வுகளில் கூட கவர்ச்சி வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் தங்கள் துணையுடன் முழு திருப்தியடைவதில்லை என்றும் தங்கள் துணைக்கு திருப்தி அளிப்பதில்லை என்றும் கூறியுள்ளது மேலும், அதிகமாக ஆபாச படங்களை பார்ப்பவர்கள் உண்மையான உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போய்விடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.