07 1444201361 2 cover head
மருத்துவ குறிப்பு

கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கான காரணங்கள்!!!

கருமுட்டை வெளிப்படுதல் என்பது ஒரு பெண்ணின் உடல் கருமுட்டையை உருவாக்கி, விந்து அணுவோடு கருத்தரிக்க அதனை வெளிப்படுத்தி, இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையாகும். மாதவிடாய் ஏற்படும் முதல் நாளிலிருந்து அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை, சராசரி சுழற்சி 28 நாட்களுக்கு நீடிக்கும்.

ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் கருத்தரிக்கும் ஜன்னல் ஒன்று உள்ளது. அது கருமுட்டை வெளிப்படுவதற்கு 2 முதல் 10 நாட்களுக்கு முன்போ பின்போ இருக்கும். மாதத்தில் பிற நாட்களை விட கருமுட்டை வெளிப்படுதலின் போது தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த மாற்றத்தை ஆண்கள் கவனிப்பது தான் இதில் முக்கியமான ஒன்றே. கருத்தரிக்கும் தன்மையை ஒரு பெண் வெளிப்படுத்துவதைக் கூட அவர்கள் உணர முடியும். சரி, கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கான 5 காரணங்களைப் பற்றி பார்க்கலாமா?

காரணம் #1
கருமுட்டை வெளிப்படுதலின் போது, இனப்பெருக்கம் செய்யவும், திடமான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க, பெண்ணின் உடல் மிகவும் ஆரோக்கியமான, வீரியமிக்க துணையை தேடி, அவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள். பெண்மை என்ற தன்மை இதை செய்ய வைக்கும். கருமுட்டை வெளிப்படுதலின் போது, ஒரு பெண் தன்னையும் அறியாமால், ஒரு ஆணை ஈர்க்க முற்படுவாள். ஏனென்றால் இப்போது தான் அவளுடைய கருவுறும் தன்மை உச்சத்தில் இருக்கும். அவளின் பார்வையிலேயே இந்த தன்மையின் உச்சத்தை காண முடியும். கருமுட்டை வெளிப்படுதலின் போது, ஒரு பெண் அனைத்திலும் சற்று மிகையாகவே இருப்பார்கள்; என்ன தான் கட்டுப்பாட்டுடன் இருப்பவர் என்றாலும் கூட ஆர்வத்தைத் துாண்டுகிற உணர்வும், குணமும் சற்று அதிகமாக இருக்கும். இதற்கு அறிகுறியாக நீடித்த பார்வை, கவர்ச்சியாக ஆடை அணிதல், உயர்ந்த ஹீல்ஸ் செருப்பு அணிதல் போன்றவைகள் நடக்கும். மற்ற நேரத்தை விட இந்நேரத்தில் பெண்கள் ஆண்மை நிறைந்த ஆணின் மீது தான் ஈர்க்கப்படுவார்கள். கருமுட்டை வெளிப்படுதல் இதனை தெளிவாக பிரதிபலிக்கும்.

காரணம் #2
கருமுட்டை வெளிப்படுதலின் போது, ஈஸ்ட்ரோஜென் அளவுகள் அதிகரித்து, அதனால் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் கன்னங்களும் உதடுகளும் சிவக்கும். இதனால் கூட கருமுட்டை வெளிப்படுதலின் போது, பெண்கள் கூடுதல் அழகுடன் தென்படுவார்கள்.

காரணம் #3 கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கு மற்றொரு காரணமாக இருப்பது, இந்நேரத்தில் அவர்கள் உடல் மேற்கொள்ளும் மாற்றம். இந்நேரத்தில் அரை இன்ச் அளவிற்காவது இடை சுருங்கி, புற உருவம் நெளிவுசுழிவுடன் அமைப்பாக இருக்கும், கண்மணிகளின் விட்டம் அதிகரிக்கும், மார்பகங்கள் சமச்சீருள்ள வகையில் மாறும். இப்படி தான் கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக உள்ளார்கள்.

காரணம் #4 மாதத்தின் பிற நாட்களை விட கருமுட்டை வெளிப்படுதலின் போது மன அழுத்தம் குறைவாக இருக்கும், குறைவான தலைவலிகள் இருக்கும் எனவும், தங்களைப் பற்றி நேர்மறையான உணர்வுகள் நிலைக்கும் என்றும் ஆராய்ச்சி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டதால், கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக இருப்பதற்கான மர்மத்திற்கு விடை கிடைத்துள்ளது.

காரணம் #5 கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக காட்சியளிப்பதற்கு உடல் பண்புகள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இந்நேரத்தில் பெண்களிடம் நல்ல மணம் வீசும்; உரத்த குரலுடனும் இருப்பார்கள். ஆண்கள் இதனால் ஈர்க்கப்படுவார்கள்.

குறிப்பு பெண்ணுக்கு கருமுட்டை வெளிப்படுதலின் போது அவள் கருத்தரிக்க அவளது உடல் மிகுந்த பலத்துடன் இயங்கும். அதனால் தான் கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தென்படுகிறார்கள். அதனால் அனைத்து பெண்களும் கருமுட்டை வெளிப்படுதலின் போது அழகாக தெரிவதை கண்டிப்பாக தவிர்க்க முடியாது. இந்த சக்தியை கவனமாகப் பயன்படுத்தி, உங்கள் சந்ததியை வளர்த்திடுங்கள்.

07 1444201361 2 cover head

Related posts

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான அற்புதமான எளிய தீர்வு

nathan

மழைக்கால நோய்கள்: டெங்கு முதல் டைபாய்டு வரை

nathan

மெனோபாஸ் வயது பிறகும் மாதவிடாய் வந்தால்…?

nathan

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்….

nathan

நீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்!சூப்பர் டிப்ஸ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்களும் அவர்கள் தவிக்க வேண்டிய உணவுகள்

nathan

கருவளம் மற்றும் ஆண் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம் இதுதாங்க இத படிங்க!!

nathan