30.1 C
Chennai
Monday, Jul 28, 2025
z5LyLIR
கர்ப்பிணி பெண்களுக்கு

தாய் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழுத்தம்

அதிக ரத்த அழுத்தம் கொண்டுள்ள பெண்கள் வளர்ச்சியடையாத இதயம் கொண்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலை குறித்து அவர்கள் விழிப்புணர்வை பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் என்பது பிரசவத்தின்போது ஏற்படும் பொதுவான மருத்துவ பிரச்சனை. ஒவ்வொரு 100 பிரசவங்களிலும் 3 பேருக்கு இதனால் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. உயர் ரத்த அழுத்த சமச்சீரற்ற தன்மையால் தாய் மற்றும் சேய் உடல் நல பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து டாக்டர் மனோஜ் குமார் கூறும்போது, ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்கு அல்லது 20 வாரங்களுக்கு முன்பு 140/90 மி.மீட்டர் அளவிற்கு அதிகமாக ரத்த அழுத்தம் இருக்கும்போது ஹைப்பர் டென்சன் பாதிப்பு இருக்கிறது என பொருள்.

இத்தகைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதத்தினருக்கு உறுப்பு குறைபாடுகளுடன் பிறக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். உலக உயர் ரத்த அழுத்த தினம் ஆனது அதன் பாதிப்பு குறித்து குறைவாக அறிந்திருப்பதை அடுத்து விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு நல்ல தளமாக உள்ளதுடன் முறையான மற்றும் சரியான நேரத்தில் தடுப்பதற்கு சாத்தியமேற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆக்சன் இதய அமைப்பின் கார்டியாலஜி பிரிவின் தலைவர் டாக்டர் அமர் சிங்கால் கூறும்போது, பிரீகிளாம்ப்சியா எனப்படும் பொதுவான நிலை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்ட கர்ப்பிணிகளிடம் 20 முதல் 25 சதவீத பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையானது மாறாத உயர் ரத்த அழுத்தம் கொண்டு இருப்பதுடன், சிறுநீரில் அதிக அளவில் புரதம் வெளியேறுவதுமாக இருக்கும்.

இது போன்ற நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து பிரசவத்தின்போது சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்து கொள்வது மிக அவசியம் என்று கூறியுள்ளார். உயர் ரத்த அழுத்தமானது வாழ்க்கை முறைகளை ஆரம்ப நிலையிலேயே மாற்றி அமைத்து கொள்வதன் வழியாக பெருமளவில் தடுத்திடலாம் என மற்றொரு நிபுணர் கூறியுள்ளார்.z5LyLIR

Related posts

குழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்

nathan

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

nathan

கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் நல்லதா?

nathan

தாய் பாலுக்கு இணையான கழுதை பால் – ஆரோக்கிய நன்மைகள்!

nathan

கர்ப்பகாலத்தில் பாரசிடமால் மருந்து சாப்பிட்டால் குழந்தையின் உடல் நலத்துக்குகேடு: ஆய்வில் புதிய தகவல்

nathan

பிரசவத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

கர்ப்ப கால 10 நம்பிக்கைகள்

nathan

கர்ப்பிணியின் முதல் மூன்று மாதங்கள்!

nathan