பொதுவாக நடு ராத்திரியில் சாப்பிடுவது கெட்ட பழக்கமாகும். அப்பழக்கம் இருந்தால், உடனே அதைத் நிறுத்துங்கள். இருப்பினும் நடுராத்திரியில் பசிக்கும் போது என்ன செய்வது? வெறும் வயிற்றில் தான் தூங்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம்.
நடு ராத்திரியில் பசிக்கும் போது, பசியைத் தணிக்கும் வகையிலான உணவுகளைத் தான் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அப்படி உட்கொள்ளும் உணவுகள் தூக்கம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
மேலும் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிறு விரைவில் நிறைந்துவிடும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. சரி, நடு ராத்திரியில் எதை சாப்பிடுவது நல்லது என்று பார்ப்போமா!!!
தயிர் கொழுப்பு இல்லாத தயிரை நடுராத்திரியில் உட்கொள்வது நல்லது. மேலும் இதில் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை உட்கொண்டால், அதில் உள்ள புரோட்டீனால் பசி விரைவில் அடங்கிவிடும். ஆனால் தயிரில் சர்க்கரை சேர்க்கக்கூடாது.
வெள்ளரிக்காய் வீட்டில் வெள்ளரிக்காய் இருந்தால், அதனை சாப்பிடலாம். இதனால் அதில் உள்ள நீர்ச்சத்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.
பாதாம் பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து மக்கும் மக்னீசியம் போன்றவை உள்ளதால், இவற்றை ஒரு கையளவு சாப்பிட்டு தூங்கினால், பசி தணிவதோடு, தூக்கமும் நன்கு வரும்.
கேரட் கேரட்டில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இவற்றை நடு ராத்திரியில் உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, பசியும் தணியும். முக்கியமாக இதில் கலோரிகள் இல்லாததால், இவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் செய்யும்.
வாழைப்பழம் நடு ராத்திரியில் வாழைப்பழம் சாப்பிடுவதும் சிறந்தது. இவை எளிதில் செரிமானமாவதோடு, தூக்கத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாது. நண்பர்களே! உங்களுக்கு நடு ராத்திரியில் சாப்பிட வேறு ஏதேனும் ஆரோக்கியமான உணவுகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.