wtv8gVn
சிற்றுண்டி வகைகள்

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு – 1 கப்,
கடலைமாவு – 4 கப்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
வெங்காயம்- தேவைப்படும் அளவு,
சமையல்சோடா – 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவைக்கு,
வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு – தலா 50 கிராம்.

எப்படிச் செய்வது?

சிறிது எண்ணெயில் வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து வைக்கவும். அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், சமையல்சோடா, உப்பு அனைத்தையும் கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூந்தி கரண்டியில் மாவை வைத்து தேய்க்கவும். பூந்தி பொரிந்து மேலே கரகரப்பாக வந்ததும் வடித்தெடுத்து முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை பொரித்த கலவையில் கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். தீபாவளிக்கு காரசாரமான ஒரு காராபூந்தி ரெடி.wtv8gVn

Related posts

30 வகை நட்ஸ் ரெசிப்பி!

nathan

வெங்காய ரிங்ஸ்

nathan

சுவையான கார்லிக் பிரட் ரெசிபி

nathan

தால் கார சோமாஸி

nathan

சுவையான முருங்கை கீரை வடை……

sangika

எக் பிரெட் உப்புமா

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

கோதுமை ரவை இட்லி&தோசை

nathan

குபூஸ்(அரேபியன் ரொட்டி)

nathan