29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 18263
மருத்துவ குறிப்பு

காணாமல் போகும் மொபைல் டேட்டா… என்ன செய்ய வேண்டும்?

ஆப்பிளோ… ஆண்ட்ராய்டோ… எனக்கு எல்லாமே அத்துப்படி. ஆனால் இந்த டேட்டா பேலன்ஸ் மட்டும் எப்படி காலியாகுதுனே தெரியமாட்டேங்குது" என சொல்லும் ஆளா நீங்கள்? உங்களுக்கு மட்டும் அல்ல, பல பேருக்கு அதுதான் புரியாத உண்மை. மொபைல் டேட்டாவை நீங்க யூஸ் பண்ணலைன்னா அப்புறம் அது எங்கதான் போகுது? வாங்க பாஸ் கண்டுபிடிப்போம்.

டேட்டா யூசேஜ்:
2 18263
டேட்டா

உங்க ஸ்மார்ட்போன்ல இருக்குற டேட்டாவெல்லாம் எங்க போகுதுனு கண்டுபிடிக்க நீங்க போக வேண்டிய முதல் இடம் டேட்டா யூசேஜ். இவர்தான் பாஸ் உங்க மொபைலோட கணக்குப்பிள்ளை . நீங்க உங்க ஸ்மார்ட்போன்ல யூஸ் பண்ணும் ஒவ்வொரு பைட் டேட்டாவும் எழுதி வைக்கப்படும்.

ஆப்பிள்,ஆண்ட்ராய்டு இரண்டிலும் இந்த வசதி மூலமா ஒரு நாளைக்கு எந்தெந்த ஆப் எவ்வளவு டேட்டாவை உபயோகப்படுத்துகின்றன என்று கண்டுபிடிக்கலாம். இதை தொடர்ந்து கவனிங்க. ஏதாவது ஏடாகூட ஆப் இருந்தா, அது நிறைய டேட்டா சாப்பிட்டா தெரிஞ்சிடும். தயவு தாட்சண்யம் பாக்காம அந்த ஆப்-ஐ டெலீட் பண்ணிடலாம். அல்லது, அந்த ஆப்-க்கு மட்டும் டேட்டாவை ஆஃப் செய்து வைக்கலாம்.
4 18491
Background Apps

ஆப்ஸ்

ஸ்மார்ட்போன்களில் டேட்டா காலியாக முதல் காரணம் இந்த பேக்கிரவுன்ட் ஆப்ஸ் தான். நாம் யூஸ் பண்ணலைன்னா கூட அதுவாகவே இயங்கும். இதை நிறுத்தினால் ஓரளவுக்கு டேட்டா வீணாவதை தடுத்து விடலாம்.

செட்டிங்ஸ்கில் இருக்கும் Restrict app background data என்பதை உபயோகப்படுத்தி எந்த ஆப்கள் மட்டும் தன்னிச்சையாக டேட்டாவை பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கலாம்.

Auto updates

டேட்டாவை ஒட்டு மொத்தமா காலி பண்றதுல இவரு பெரிய ஆளு பாஸ். கொஞ்சம் டேட்டா இணைப்பு கிடைச்சா போதும் ஆப்கள் அதுவாகவே டவுன்லோட் ஆகி அப்டேட் ஆகிக்கும். 100 எம்,பிக்கு மேல இருக்கிற அப்டேட்ஸ் எல்லாம், பொறுத்திருந்து Wifiல பண்ணிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அதனால, ஆட்டோ அப்டேட்ஸை ஆஃப் செஞ்சு வைங்க.

ஒரு சில ஆப்கள் அப்டேட்டாக இருந்தால் மட்டுமே இயங்கும் என்பதால் அதை மட்டும் ஆட்டோ அப்டேட் செலக்ட் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டில் பிளே ஸ்டோர் செட்டிங்ஸ் பகுதியில் இந்த ஆப்சன் இருக்கும். ஆப்பிளில் தனியாகவே இருக்கிறது.

Auto sync

ஆப்பிளின் கிளவுட் ஸ்டோரேஜ் போன்றே ஆண்ட்ராய்டிலும் இந்த வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் இருக்கும் உங்கள் தகவல்களை காப்பி எடுத்து வைப்பதற்கு பயன்படும். ஒரு வேளை மொபைல் தொலைந்தால் கூட கிளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்தி உங்கள் தகவல்களை மீட்கலாம். ஆனால் Auto sync வசதி உங்கள் அனுமதி இல்லாமலே டேட்டாவை பயன்படுத்தும். இதை நிறுத்தி வைப்பதன் மூலம் டேட்டா காலியாவதை தடுக்கலாம். இல்லையென்றால் Wifi மூலம் மட்டும் sync வசதி இயங்குமாறு மாற்றியமைக்கலாம்.

Voice assistant

ஆப்பிள் சிரி,கூகுள் அசிஸ்டெண்ட், சாம்சங் பிக்ஸ்பி என அனைத்து வாய்ஸ் அசிஸ்டெண்ட்களுமே உங்கள் பேச்சை கேட்டாலும் டேட்டாவை மட்டும் உபயோகிக்கும். எனவே முடிந்தவரை அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
1 18401
Auto Downloads

ஆப்ஸ்

Whatsapp,Hike போன்ற ஆப்களில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் அதன் மூலமாக உங்களுக்கு வரும் படம்,வீடியோ என அனைத்துமே தானாகவே டவுன்லோட் ஆகும். எனவே அதை ஆஃப் செய்து வேண்டியவற்றை மட்டும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலமாக அதிகமான டேட்டா செலவாகும். எனவே டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

மேலே சொன்ன வழிகளை பின்பற்றினால் முடிந்தவரை டேட்டா வீணாவதை தடுத்து விடலாம். உங்க போன்ல எவ்வளவு டேட்டா யூஸ் பண்ணறதுனு முடிவு பண்ண வேண்டியது நீங்கதான் பாஸ். உங்க டேட்டா உங்க உரிமை.

Related posts

நம்மை காக்கும் இம்யூனிட்டி! – ஹெல்த்தி வழிகாட்டி

nathan

சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் எதுவும் வரக்கூடாதா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு!

nathan

உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றி வீக்கங்களை போக்க நாட்டு வைத்தியங்கள்.இதை படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…விட்டமின் டி உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி பிடிக்காதா?

nathan

சுண்டை…சின்னகாய்…பெரிய பலன்…!

nathan

“பேஸ்மேக்கர்” பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan

இதோ எளிய நிவாரணம்! 4 நாளில் இந்த கொடூரமான பாதவெடிப்பை கூட சரிசெய்யும் இரண்டு பொருள்கள் இவைதான்…

nathan

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிப்பதற்கான காரணங்கள்!!!

nathan