23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
19 1479549027 oilyhair
அழகு குறிப்புகள்கூந்தல் பராமரிப்பு

கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்க,

கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இல்லை. விதவிதமாக ஹேர்ஸ்டைல் வைத்து அலங்கரிப்பது சிலருக்குப் பிடிக்கும் என்றால், கூந்தலை ஃப்ரீயாக விடுவதுதான் சிலருக்குப் பிடிக்கும். எந்த ஹேர்ஸ்டைலும் செய்யலாம்தான்.  ஆனால், அதற்கு முன் எப்படி தன் கூந்தலைப் பராமரிப்பது, ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வெளியில் செல்லும்போது எப்படி கூந்தலைப் பாதுகாப்பது என்பதில் அக்கறை வேண்டும்.

 

மாசடைந்த காற்று, அதிக வெப்பம், புற ஊதாக் கதிர்வீச்சு போன்றவை கூந்தலில் நேரடியாகப் படும்போது, அதன் இயற்கைத்தன்மை இழந்து, வறட்சியாகி முடி உடைந்துவிடுகிறது. நாளடைவில் நுனி முடியில் பிளவு ஏற்பட்டு பொலிவு இழக்கும். சீக்கிரத்திலேயே முடி கொட்டும். ஹேர்ஸ்டைல் செய்யவும், ஃப்ரீ ஹேர்விடவும் விரும்புவோர் முதலில் தலைமுடியின் தன்மையைக் கண்டறிய,  இரு விரலில் முடியை சுற்றி, இழுத்துப்பார்த்தால் அதன் உறுதித்தன்மை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இழுக்கும் போதே முடி உடைந்துவிட்டால், அது வீக் ஹேர்.

கூந்தலுக்கு எதிரி…

நிலத்தடி நீரீல் துவர்ப்பு, உப்பு எனப் பல தன்மைகள் உண்டு. கூந்தலை நல்ல தண்ணீரில் அலசுவது முக்கியம். ஆனால், நிலத்தடி நீரும், குளோரின் கலந்த நீரும் தவிர வேறு வழி இல்லை என்பவர்கள், எந்த நீரில் கூந்தலை அலசினாலும், கடைசியில் இரண்டு ஜக் நல்ல நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தலில் தங்கியிருக்கும் உப்பு, தாதுக்கள் வெளியேறிவிடும்.

அழகு கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய்

கூந்தலில் எண்ணெய் தடவலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். எண்ணெய் தடவுவது நல்லது. ஆனால் அந்த எண்ணெய் கலப்படம் இல்லாததாக இருக்கவேண்டும். தேங்காய் பாலை அடுப்பில் கொதிக்கவைத்து, கடைசியில் கிடைக்கும் திரவமே, சுத்தமான தேங்காய் எண்ணெய். தினமும் இதைத் தடவிவர, கூந்தல் ஊட்டமாகும். எண்ணெய் காய்ச்சும் போது தேங்கும் கசடைத் தூக்கிஎறியாமல் ஹேர் பேக்குடன் பயன்படுத்தலாம்.

வீட்டிலே தயாரிக்கும் ஹேர் பேக்

வீட்டில் தயாரித்த பொருட்களைக் கொண்டு  வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டுக்கொள்வது கூந்தலுக்குப் பாதுகாப்பை அளிக்கும். கூந்தலின் உயிரோட்டம் ஹேர் பேக்கில் அடங்கியுள்ளது.

வறண்ட கூந்தல்!

வாரம் மூன்று முறை தலைக்குக் குளிக்கவேண்டும். தரமான, அவரவர் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரைப் பயன்படுத்துவது அவசியம். ஷாம்பூக்குப் பதில் சிகைக்காய் தேய்த்து குளிப்பது நல்லது. எதைப்போட்டு கூந்தலை அலசினாலும், அவ்வபோது, ஹேர் பேக் போட்டுக்கொள்வது கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

எளிய ஹேர்பேக்

அவகேடோ பழம்  1, தயிர்  2 டீஸ்பூன்,முட்டை 1,  பாதாம் எண்ணெய்  1 டீஸ்பூன் ஆகியவற்றை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கூந்தலை அலசலாம். வறண்ட முடி பளபளப்பாகும்.

எண்ணெய் கூந்தல்!

தினமும் தலைக்குக் குளிக்கலாம். கற்றாழையை நடுவில் நறுக்கி, அதில் வெந்தயத்தைக் கொட்டி, பிறகு நூலில் அதை கட்டி இரவு அப்படியேவிடவும். மறுநாள், கற்றாழையின் சதைப் பகுதியையும், வெந்தயத்தையும் எடுத்து முட்டை, வைட்டமின் இ எண்ணெய் கலந்து, தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பிசுபிசுப்பு போய் பொலிவாக இருக்கும்.

ஹேர்… கேர்!

கடினமான ஹேர்ஸ்டைல், தலைமுடியை இழுத்து வாருதல், முன்பக்கம் தூக்கி வாருதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். இதனால், நெற்றி பெரிதாகி, கூந்தலில் உள்ள ஃபாலிக்கில்ஸ்க்கு பி்ரஷர் ஏற்பட்டு கூந்தல் சேதமடையும்.  எனவே, தளர்வான ஹேர்ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.

கிரேப் சீட் ஆயில் – 4 ஸ்பூன், தைன் (Thyne) ஆயில் – 2 துளிகள், சிடர்வுட் (Ciderwood) – 4 – துளிகள், ஜோஜோபா (Jojoba) ஆயில்- 1/2 ஸ்பூன், லாவண்டர் ஆயில் – 3 துளிகள், ரோஸ்மெரி – 3 துளிகள் ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் நன்றாகத் தடவி, பிறகு வெந்நீரில் நனைத்த டவலை முடியில் கால் மணி நேரம் வரை சுற்றிவைக்கலாம். பின்னர் கூந்தலை அலசிவிடுங்கள். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால், வீக்கான கூந்தல் வலுவாகும்.

வேறு வேறு முடி வகைகளைக் கொண்டவர்கள் ஒரே ஷாம்பூவைப் பயன்படுத்தக் கூடாது.

வெயிலிலோ, வெளியில் செல்லும்போதோ குடை அல்லது ஸ்கார்ஃப் அணிந்து செல்லலாம்.

அடிக்கடி ஷாம்பூ, எண்ணெய், கண்டிஷனரை மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது.

ஊட்டமாக வளர உணவும் முக்கியம்!

ஊட்டச்சத்தான உணவுகளே கூந்தலுக்கு வலு சேர்க்கும். பச்சைப்பயறில் புரதம் மிகுதியாக உள்ளதால், வாரம் ஒருமுறை சாப்பிடலாம். முடி உதிர்தல் நிற்கும்.

இரவே, ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதைக் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடிக்கலாம். மேலும் பால், தயிர், ஒட்ஸ், மீன், பயறு வகைகள், சூரியகாந்தி விதைகள், ஃப்ளாக்ஸ் விதைகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

சாப்பிடுவதற்கு முன்  டிரை ஈஸ்ட் (Dry Yeast) சாப்பிடலாம்.

தினமும் நெல்லிக்காயை உண்ணலாம்.

வைட்டமின் ஏவும், பீட்டா கரோட்டீனும் நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு முடி உதிர்தலைப் போக்கும்.

பாதாமில் வைட்டமின் இ, வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் இருப்பதால், கூந்தலுக்கான கண்டிஷனர் இவை.

முட்டையில் பயோடின் மற்றும் வைட்டமின் பி நிறைந்திருப்பதால் முடி உதிர்தலை தடுக்கிறது.

பச்சைக் காய்கறிகளான குடமிளகாய், புரோகோலி, கீரை வகைகள், தாதுக்கள், வைட்டமின் பி, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.

தினமும் ஒரு கிளாஸ் சோயா பால் கூந்தல் வளர்க்கும் சிறந்த ஊட்டச்சத்து பானம்.

Related posts

பவுடர் போட போறீங்களா

nathan

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ்……

nathan

சூப்பர் டிப்ஸ்..சரும வறட்சிக்கு இயற்கை முறையில் பாதுகாப்பு!

nathan

அடேங்கப்பா! அப்பாவுடன் புத்தாண்டை கொண்டாடிய அக்சராஹாசன்…..

nathan

அழகிய மிருதுவான பாதத்தைப் பெறுவதற்கு…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி… எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan

இந்த வீடியோவில் ஒரு சூப்பரான நைட் கிரீம் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.

nathan