28.9 C
Chennai
Monday, May 20, 2024
Skin care express photo for inuth
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகு ஆலோசனை!

‘‘வெ யில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால், தலையில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி வெடிப்பதுடன், செம்பட்டையாகவும் ஆகிவிடும். பஸ்ஸிலோ, டூ வீலரிலோ போகும்போது புழுதிபடுவதால், முடி வறண்டு கொட்டத் தொடங்கும். தலையை சுத்தமாக வைத்திருப்பதே இதற்கு நல்ல தீர்வு. வாரம் இருமுறையாவது நான் சொல்கிற முறையில் தலையை அலசி வந்தாலே, எல்லாப் பிரச்னைகளும் சரியாகி விடும். 

Skin care express photo for inuth
bullet4 செம்பருத்தி இலை – 10, கொட்டை நீக்கிய புங்கந் தோல் – 3 எடுத்து, இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருநாள் இதைத் தலை முழுவதும் பூசி, நன்றாகத் தேய்த்து அலசுங்கள். புங்கந் தோல், தலையில் உள்ள அழுக்கை நீக்கும். செம்பருத்தி, கூந்தலை மிருதுவாக்கும்.

bullet4 சீயக்காய் – கால் கிலோ, பயத்தம் பருப்பு – 200 கிராம், பூலான்கிழங்கு – 100 கிராம், சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர் – 10 கிராம்… இந்த நான்கையும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு இந்தப் பவுடரை பயன்படுத்துங்கள். இதனால் முடி கொட்டாமல், செழிப்பாக வளரும். வாசனையுடனும் இருக்கும்.
பேன் தொல்லை இருந்தால் இந்த பவுடருடன், துளசி பவுடர், சுட்ட வசம்புத்தூள் – தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பேனோ, பொடுகோ கிட்டவே நெருங்காது.
தலைக்கான ஹென்னா கண்டிஷனர் தயாரிக்கும் முறையைச் சொல்கிறேன்…

bullet4
மருதாணி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், வெந்தய பவுடர், அரைத்த டீத்தூள், நெல்லிக்காய் தூள் தலா – 1 டீஸ்பூன், தயிர் – 2 டீஸ்பூன்… எல்லாவற்றை யும் கலந்து, இத்துடன் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, வெந்நீர் ஊற்றி பேஸ்ட் ஆக்குங்கள். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து அலசுங்கள்.
மருதாணி, தலையை குளிர்ச்சியாக்கும். வெந்தயம், முடி வெடிப்பையும் நுனி பிளவையும் போக்கும். நெல்லிக்காய், முடி கொட்டுவதை நிறுத்தும். நல்லெண்ணெய், செம்பட்டையான முடியை கறுமையாக்கும். தயிரும் டீத்தூளும் கூந்தலை மிருதுவாக்கும்.’’

Related posts

அழகான நீண்ட கூந்தலுக்கு, பளபளக்கும் சருமம் அரிசி கழுவிய நீர்..!!

nathan

பருக்களைத் தடுப்பது எப்படி,tamil beauty tips for pimples

nathan

இந்த ராசிக்கார தம்பதிகள் என்ன பிரச்சனை வந்தாலும் பிரியவே மாட்டார்களாம்..

nathan

வறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்…

nathan

அழகை அதிகரிக்க நம் பாட்டிமார்கள் பின்பற்றிய பாரம்பரிய அழகு குறிப்புகள்!

nathan

பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா அட்லி..

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

அம்மாடியோவ் ! கர்ணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

nathan

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க

nathan