மாலையில் ஏதாவது டிபன் சாப்பிட விருப்புபவர்கள் எளிதாக செய்யக்கூடிய இந்த சேமியா புலாவ் செய்து கொடுக்கலாம். இந்த சேமியா புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
மாலை நேர டிபன் சேமியா புலாவ்
தேவையான பொருட்கள் :
சேமியா – 100 கிராம்,
வெங்காயம், கேரட் – தலா 1,
பச்சைமிளகாய் – 2,
பட்டாணி – 50 கிராம்,
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை – 30 கிராம்,
வெண்ணெய்/நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.
தாளிக்க :
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை :
* சேமியாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழையவிடாமல் வேகவைக்கவும். மீதமுள்ள தண்ணீரை வடிகட்டவும்.
* வெங்காயம், கேரட், கொத்தமல்லி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் நெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் கேரட், பட்டாணி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
* காய்கறிகள் வெந்தவுடன் கடைசியாக வெந்த சேமியா, கொத்தமல்லி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறவும்.
* சூப்பரான சேமியா புலாவ் ரெடி.
* விருப்பப்பட்டால், எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.