22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
1481457774 9242
அசைவ வகைகள்

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

* முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும். அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், சூடான சுவையான கடாய் பன்னீர் தயார்.1481457774 9242

Related posts

மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

nathan

காரைக்குடி மீன் குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு

nathan

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

nathan

மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி…..

sangika

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

முட்டை மசாலா பிரட் டோஸ்ட்

nathan

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan

சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி

nathan