28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
12
மருத்துவ குறிப்பு

ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)

ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)

ஆடா தொடை
12

ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா என்று கூறப்படுகிறது. நீண்ட முழுமையான ஈடிவடிவ இலைகளையும் வெள்ளைநிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. சிற்றுர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

Herbal Hills Wheat-O-Power Powder – 100 g (Natural Flavor)ir?t=samite 21&l=as2&o=31&a=B00FR8W4O0

சளி நீக்கி இருமல் தனிப்பனாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

  • இலைச் சாரும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்த கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

குழந்தைகளுக்கு 5 + 5 துளி
சிறுவர் 10 + 10 துளி
பெரியவர் 15 + 15 துளி

  • இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதப்பேதி, இரத்தப்பேதி குணமாகும்.
  • 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் (T.B) காசம், இரத்தக் காசம், சளிச்சுரம், விலாவலி ஆகியவைத் தீரும்.
  • ஆடாதொடை வேருடன் கணடங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.
  • ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகப் காய்ச்சிக் காலை, மாலை பருகி வர குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.
  • உலர்ந்த ஆடாதொடை இளைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.
  • 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைக் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துக் தேன் பதமாகக் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேலையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல், புளுரசி, நீர்த்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.
  • ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், காஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேலைக்கு 50 மி.லி அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக் கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.
  • வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரவசம் ஆகும்.
  • ஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் 4 வேளை குடித்து வந்தால், நுரையீரல் ரத்த வாந்தி, கோழை மிகுந்த மூச்சு திணறல், இருமல், ரத்தம் கலந்த கோழை போன்ற வியாதிகள் குணமாகும்.
    இவற்றை சிறு குழந்தைகளுக்கு 5 சொட்டும், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 10 சொட்டும், பெரியவர்களுக்கு 15 சொட்டும் என அளவாக கொடுத்தால் போதும். ஆடாதொடையின் இலைச்சாற்றை 2 தேக்கரண்டி எடுத்து, அவற்றுடன் 1 டம்ளர் எருமைப் பாலை கலந்து 2 வேளை குடித்து வந்தால் சீதபேதி, ரத்த பேதி போன்றவை குணமாகும்.

    இந்த இலையில் 10 எண்ணிக்கை எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து அவற்றை 2 வேளை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால், எலும்புருக்கி காசநோய் (டி.பி), ரத்த காசம், சளி காய்ச்சல், சீதள வலி, விலா வலி ஆகியவை குணமடையும்.ஆடாதொடையின் வேருடன் கண்டங்கத்திரியின் வேரையும் சம அளவில் எடுத்து, இடித்து பொடியாக்கி, 1 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை தேனில் கலந்து 2 வேளை தொடர்ந்து உட்கொண்டால் நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளி காய்ச்சல், எலும்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை நீங்கும்.

    ஆடாதொடையின் இலையையும் புதினா இலைகளையும் 1 கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி,லி.யாக சுண்ட காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடிக்கலாம். அப்படி செய்தால் கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை குணமாகும்.உலர்ந்த ஆடாதொடை இலையை பொடி செய்து, ஊமத்தம் இலையில் சுருட்டி புகைபிடித்தால் மூச்சு திணறல் உடனே நிற்கும்.

    ஆடாதொடை இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விசுணுகரந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் போன்றவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அவற்றை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்டர் அளவாக சுண்ட காய்ச்சி வடிகட்டி, 4 வேளைக்கும் 50 மி.லி. அளவு குடித்தால், எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.ஆடாதொடை வேரை 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி.லி.யாக காய்ச்சி வடிகட்டி குடித்தால், எல்லா விஷங்களும் முறிந்துவிடும். ஆடாதொடை இலையுடன் சிவனார்வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், கட்டி போன்ற உள்ரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி உள்ளிட்ட விஷங்களும் குணமாகும்.

    ஆடாதொடை இலையுடன் வேப்பமர இலை, அரிவாள்மணை பூண்டு இலை, சிறியாநங்கை இலை போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து, நீண்ட நாள் புண்கள் மீது பற்று போட்டு வந்தால், அவை ஆறி, புண்கள் இருந்த தழும்புகளும் மறைந்துவிடும்.இதனுடன் குப்பைமேனி இலையையும் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால், இடுப்பில் பாவாடை நாடா மற்றும் அரைஞாண் கயிற்றினால் ஏற்பட்ட புண்கள் ஆறி, அவற்றின் கறுப்பு தழும்புகள் ஓடியே போய்விடும்.

    ஆடாதொடை இலையை ஆவியில் வாட்டிய பின்னர், அதை சாறு பிழிந்து ஒரு டீ ஸ்பூனில் எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால், வறட்டு இருமலுடன் துப்பும் சளியில் ரத்தம் கலந்து வருவது உடனே நிற்கும். அத்துடன் 10 சொட்டு தூதுவளை இலையை சாறு பிழிந்து குடித்தால், சவ்வு போன்று இழுக்கும் இருமல் நீங்கும்.

  •  எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்குகொடுத்தால் இருமல் குணமாகும்.
  • பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவதுஉறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

Related posts

தெரிந்துகொள்வோமா? உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்!!!

nathan

புற்றுநோயும் பெண்களும்

nathan

எந்த நோய்க்கு எந்த மூலிகையை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியுமா?

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை! இதை முயன்று பாருங்கள்!..

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! இரத்த அழுத்தத்தை பராமரிக்க 5 சிறந்த வீட்டு வைத்தியம்..!!!

nathan

டயட்’டில் பெண்களின் முன்னழகு பாதிக்கிறதா? தப்பிக்க என்ன செய்யலாம்?

nathan

வாடகைத் தாய் மற்றும் சோதனைக் குழாய்கள் – குழந்தை பெற சிறந்த வழி எது?

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

. ஆச்சரியப்படுவீங்க..வீட்டுல 2 பிரியாணி இலையை எரிங்க.. 10 நிமிடம் கழிச்சு என்ன நடக்குதுன்னு பாருங்க.

nathan