இமை போல் பாதுகாக்க என்று எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாய் சொல்லும் இமைகளை பாதுகாப்பதும் முக்கியம்தானே.
இமைகள் ஏன் சிலருக்கு வளர்வதில்லை. சரியான போஷாக்கு கிடைக்காமல் இருந்தால், அல்லது இயற்கையாகவே இமை வளர்ச்சி குறைதல், ஆகிய்வை காரணமாக இருக்கலாம்.
அடர்த்தியான இமை கிடைக்க நீங்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்யலாம் என பார்க்கலாமா?
பயோடின் அல்லது கொலாஜன் சப்ளிமென்ட்ரி : இது ஒரு மேஜிக் சத்தாகும். கொலாஜன் என்ற நார் சத்து அதிகமாகும்போது கெராடின் உற்பத்தி தூண்டப்படும் .
கண்ணிமை சீரம் : கண்ணிமைக்கான சீரம் அழகு சாதன பொருட்களில் கிடைக்கும். நல்ல தரமான சீரம் வாங்கி தினமும் இரு வேளை உபயோகித்தால் கண்ணிமை வளர்ச்சி தூண்டப்படும். அடர்த்தியான இமை மற்றும் புருவம் உங்களுக்கு கிடைக்கும்.
மேக்கப் செய்யும் முன் : கண்ணிற்கு மேக்கப் போடுவதற்கு முன் மாய்ஸ்ரைஸர் போடுவது நல்லது. கண்களுக்கு போடும் மஸ்காரா தரமானதாக இல்லையென்றால் அவை கண்ணிமைகளை பாதிக்கும். ஐ லைனர், மஸ்காரா அடிக்கடி போடுவதையும் தவிர்க்கவும். இமை கண்ணிமைகளை மட்டுமல்ல கண்களையும் பாதிக்கும்.
கண் மேக்கப்பை அகற்றும் போது : கண்களுக்கு போடும் மேக்கப்பை அழுத்தியோ, பரபரவெனவோ தேய்த்து அகற்றக் கூடாது. ரோஸ் வாட்டர் அல்லது எண்ணெய் கொண்டு மென்மையாக அகற்ற வேண்டும்.
செயற்கை கண்ணிமை : செயற்கை கண்ணிமைகள் கண்களில் இமைகளை உதிர்த்து மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து விடும். சிலருக்கு அலர்ஜியும் உண்டாகும். ஆகவே செயற்கை இமைகளை தவிர்த்து விடுங்கள்.