30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
கண்கள் பராமரிப்பு

கண்களுக்கான அழகு சாதனங்கள்

உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள். கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும்.

கண்களுக்கான அழகு சாதனங்கள்
உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள். ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள அதிகம் பிரயத்தனப் பட வேண்டாம். கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும். தவறான ஐ மேக்கப், இருக்கும் அழகையும் கெடுக்கக் கூடியது. கண்களுக்கான அழகு சாதனங்கள் பற்றியும் உங்களுக்காக.

கண்களுக்கடியில் கருவளையங்கள் என்பவை இன்று அனேகமாக எல்லோரும் சந்திக்கிற பிரச்சனையாக இருக்கிறது. வாழ்க்கை முறை, தூக்க மின்மை, கம்ப்யூட்டர் மற்றும் டி.வியின் முன் நீண்ட நேரம் இருப்பது, சத்துக் குறைபாடு என இதற்குப் பல காரணங்கள். இப்படிக் கருவளையங்கள் ஏற்படுகிற போது, அந்தப் பகுதி மட்டும் முகத்தின் சருமத்தோடு ஒட்டாமல் தனித்து தெரியும்.

கண்களுக்கடியில் உள்ள கருமையைப் போக்க கன்சீலர் உபயோகிக்கும் போது, ஒட்டுமொத்த சரும நிறமும் ஒரே மாதிரி மாறும். கன்சீலர் உபயோகித்த பிறகு கண்களுக்கான மேக்கப்பை ஆரம்பித்தால், கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். கன்சீலர் உபயோகிக்கும் போது கண்களின் ஓரங்களில் தடவ வசதியாக கார்னர் ஸ்பான்ஜ் என்பதை உபயோகித்தால்தான் கன்சீலர் சீராகப்பரவும். கன்சீலர் தடவிய பிறகு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் உபயோகிக்க வேண்டும்.

கண்களின் அழகை எடுத்துக் காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய பங்குண்டு. புருவங்கள் சரியான ஷேப்பில் திருத்தப்பட்ட பிறகே கண்களுக்கான மேக்கப்பை தொடங்க வேண்டும். கண்கள் மற்றும் புருவங்களுக்கு சரியான வடிவத்தைக் கொடுக்கக் கூடியது இந்த பென்சில். ஐ பென்சிலில் டார்க் பிரவுன் மற்றும் கருப்பு என 2 ஷேடுகள் முக்கியமானவை. இது பவுடர் மற்றும் கிரீம் வடிவில் கிடைக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள் ஹேண்ட் பேக்கில் வைத்து உபயோகிக்க எளிதான பென்சில்களாக கிடைக்கின்றன. டார்க் பிரவுன் ஷேடு உபயோகித்தால் மிக இயல்பான தோற்றம் கிடைக்கும்.

Related posts

உங்கள் கண்ணிமையை அடர்த்தியாக்க இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க!

nathan

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகள்…..

sangika

கருவளையத்தை நீக்க

nathan

கண்ணை என்ன செய்யலாம்?

nathan

கருவளையம் மறைய வழி -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு

nathan

புருவம் வளர எளிய வழிகள்

nathan

கண் கருவளையத்தை போக்கும் வெள்ளரி

nathan