29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201705051459063194 Exercise to strengthen the front thigh SECVPF
உடல் பயிற்சி

முன் தொடையை வலிமையாக்கும் உடற்பயிற்சி

முன் தொடையை வலிமையாக்கவும், முன் தொடையின் சதையை குறைக்கவும் சூப்பரான பயிற்சி உள்ளது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

முன் தொடையை வலிமையாக்கும் உடற்பயிற்சி
பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும்.

தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும். இந்தப் பயிற்சிகளை சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு செய்வதே நல்லது. காரணம், உண்ட பின்பு ஒன்றரை மணி நேரம் வரை நமது உடல் உணவைச் செரிக்கவே முக்கியத்துவம் கொடுக்கும்.

201705051459063194 Exercise to strengthen the front thigh SECVPF

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். வலது முழங்காலைப் பின்புறம் மடக்கி, வலது கையால் கணுக்காலைப் பிடித்தபடி 10 முதல் 30 நொடிகள் அப்படியே நிற்க வேண்டும். தேவைப்பட்டால், மற்றொரு கையை சுவரில் ஊன்றிக்கொள்ளலாம். இடது, வலது காலுக்கு என முறையே 15 முதல் 20 தடவை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் ஒற்றை காலில் நிற்பது சற்று கடினமாக இருக்கும். அப்போது சுவற்றை பிடித்து கொள்ளலாம். நன்றாக பழகிய பின்னர் சுவற்றை பிடிக்காமல் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகளை இடது, வலது என இரண்டு பக்கமும் செய்ய வேண்டும்.

Related posts

மனஅழுத்தத்தை போக்கும் 4 ஆசனங்கள்

nathan

பின்னழகை அழகாக்கும் பயிற்சி

nathan

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங்

nathan

உங்களுக்கு தெரியுமா உடற்பயிற்சி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து..

nathan

மன அமைதிக்கு சிறந்தது சவாசனம்

nathan

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

nathan

கடற்கரை மணலில் நடைப்பயிற்சி செய்யலாமா?

nathan

இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் சிரசாசனம்

nathan

முழு உடலுக்குமான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

nathan