உணவு, ஆக்சிஜன் பயன்பாடு, சூரியக் கதிர்வீச்சு, மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் ஃப்ரீ ராடிக்கள்ஸ் (Free radicals) உருவாகிறது. இந்த ஃப்ரீராடிக்கள்ஸ் உடலில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை வெளியேற்றி, செல்களை பாதுகாப்பவற்றை ஆன்டிஆக்ஸிடன்ட் என்று சொல்வோம். உணவுகளில் உள்ள ஆக்சிஜனேற்ற பாதிப்பை தவிர்க்கும் திறனை ஆக்சிஜன் ரேடிக்கல் அப்சர்பன்ஸ் கெபாசிட்டி (Oxygen radical absorbance capacity) என்று சொல்வார்கள்.
எலக்ட்ரானை இழந்த செல்களுக்கு, ஆன்டிஆக்ஸிடன்ட் தன்னிடம் உள்ள எலக்ட்ரானை அளித்து பாதுகாக்கிறது.
மிகக் குறைந்த காலத்திலேயே இளமை தோற்றத்தை இழக்கும் பிரச்னையை ஆன்டிஆக்ஸிடன்ட் தடுக்கிறது.
காய்கறி, பழங்களைக் காட்டிலும், மசாலாப் பொருட்களில்தான் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.