26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
15181354 1325345184206283 4272789051396794840 n 24 1479987377
சிற்றுண்டி வகைகள்

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

சமையல் சுலபமாகவும் நேரம் குறைவாகவும் அதே நேரம் சத்துள்ளதாகவும் இருந்தால் சமைப்பத்ற்கு நமக்கே ஆசையாக இருக்கும்.

அவ்வகையில் வேலை செல்லும் அவசரத்தில்சமையல் செய்ய முடியலையே என குற்ற உணர்ச்சியுடன் செல்லாமல், நேரத்தை குறைக்கும் வகையில் சமையல் செய்ய பழகி கொண்டால் அலட்டிக் கொள்ளாமல் ஆரோக்கியத்தை பெற முடியும்.

அவ்வகையில் உங்களுக்காக இந்த எளிய ரெசிபி. முயற்சி செய்துதான் பாருங்களேன்.

தேவையானபொருட்கள்: நேந்திரம்பழம் – 3 இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி சிறிய வெங்காயம் – 2 தக்காளிப்பழம் – 2 கடுகு+உளுந்து – அரை தேக்கரண்டி சீரகம் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு அரைத்த பச்சை மிளகாய் – 3 தேக்கரண்டி முந்திரி & கருப்பு உலர் திராட்சை (அல்லது) நிலக்கடலை – தேவையான அளவு

வாசனைக்காக: கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு இலவங்க பட்டை – சிறிதளவு உலர் ரோஜா இதழ்கள் – 5 இதழ்கள் (பட்டை, இலவங்கம், ரோஜா இதழ் மூன்றும் சேர்த்து பிரியாணி மடிப்பு என மளிகையில் கிடைக்கும்) ஆலிவ் எண்ணெய் / சுத்தமான தேங்காய் எண்ணெய் / கடலை எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய் – கேரளத்து சுவை விரும்பிகளுக்காக. கடலை எண்ணெய் – சத்து மிகுந்தது; தோலுக்கு நல்லது; சுவையூட்டிக்காக பயன்படுத்தலாம். அல்லது வாசனைக்காக நெய் பயன்படுத்தலாம்.

செய்முறை: முதலில் நேந்திரம்பழத்தை இரண்டாக அரிந்து, அதை குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை விட வேண்டும்.

குக்கர் வேலை முடிந்ததும்… •வானலியில் எண்ணெ/ நெய்யை ஊற்றி, வழக்கம்போல கடுகு உளுந்தை பொறித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு, சீரகம், நிலக்கடலை, பச்சை மிளகாய் சாந்து, கருவேப்பிலையை வாசனை வரும்வரை நன்கு வதக்கவும். •அடுப்பில் அனல் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையில் வைத்துக்கொள்ளுங்கள். •வெங்காயத்தை மட்டும் முதலில் போட்டு வதக்கினால், பதார்த்தம் சுவையுடன் மட்டுமின்றி, நல்ல வாசனையுடனும் கிடைக்கும். (வெங்காயம் ஆண்மைக்கு நல்லது) •இலவங்கப் பட்டை-ரோஜா இதழ்-ஏலக்காயை இடித்தும் போடலாம், அல்லது பொடித்தும் போடலாம். (உடல் எடையைக் குறைக்கும் இலவங்கம்) •மேற்கூறிய அனைத்தையும் செய்த பிறகு, வதக்கலை வானலியிலே வைத்துக்கொள்ளுங்கள்.

•இப்போது, குக்கரில் இருக்கும் நேந்திரம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதை வானலியில் கொட்டி நன்கு கிளற வேண்டும். ( நேந்திரம் பழம் உடல் பளபளப்பை தரும்) •வாழையும் வதக்கலும் இரண்டரக்கலந்து செம்மஞ்சள் நிறமாக மாறும் வரை, கிளறி விடவேண்டும். •இதை செய்யும்போது, அடுப்பு அனல் கதகதப்பாகவே இருக்க வேண்டும். வெப்பம் அதிகரித்தால் பதார்த்தம் அடிப்பிடித்து தீய்ந்துவிடும். •கிட்டத்திட்ட பதார்த்த பதம் பஞ்சாமிர்தம் போல வந்ததும், வானலியை இறக்கவும். •தட்டில் வைத்து பரிமாறும்போது, பதார்த்தத்தின் மீது கொத்தமல்லி, புதினா இலைகளை தூவிவிடுங்கள். (மன அமைதி, தூக்கம், முடி வளர்ச்சிக்கு கொத்தமல்லி, புதினா) •உடைத்த முந்திரி பருப்புகள், கருப்பு உலர்திராட்சைகளையும் தூவிடலாம். ( இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு நல்லது) •பாரம்பரிய முறையில் சாப்பிடுபவர்கள் வாழையிலையில் வைத்து சாப்பிடலாம். (வாழையிலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்)

15181354 1325345184206283 4272789051396794840 n 24 1479987377

Related posts

கோதுமை ரவை இட்லி&தோசை

nathan

வாழைப்பழ சப்பாத்தி

nathan

ராகி கொழுக்கட்டை

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

சோயா காளான் கிச்சடி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசா

nathan

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி

nathan

சீஸ் போண்டா

nathan

கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி

nathan