27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
drutsalad 14 1479103893 1
ஆரோக்கிய உணவு

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !!

நீங்கள் ஓல்லியாக விரும்புகின்றீர்களா? ஆம் எனில் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் குறைவான கொழுப்பு உணவு தேவை. ப்ரூட் சாலட் உங்களுக்கான ஒரு அற்புதமான தேர்வாகும்.

உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட பழங்களை சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஒரு கிண்ணம் முழுவதும் ப்ரூட் சாலட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் தரும் வகையில் ஒரு புதுமையான முறையில் ப்ரூட் சாலட் தயாரிக்கும் செய்முறை விளக்கத்தை கொடுத்துள்ளோம். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது என நீங்கள் யோசிக்கலாம்.

மிகவும் வித்தியாசமான முறையில் ப்ரூட் சாலட் தேன் மற்றும் மிளகாய் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாவ், இப்போது யம்மி என்கிற வார்த்தையை உங்களின் உதடு உச்சரிப்பது எங்களுக்கு கேட்கின்றது.

இந்த வித்தியாசமான ப்ரூட் சாலட்டைப் பற்றி தெரிந்து கொள்ள விரிவான செய்முறையை தொடர்ந்து படியுங்கள். பரிமாறும் அளவு – ஒரு கிண்ணம் தயாரிப்பு நேரம் – 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்: 1. நறுக்கிய அன்னாசி – ½ கப் 2. ஆரஞ்சு – 1 3. பேரிக்காய் – 1 4. அக்ரூட் பருப்புகள் – கால் கப் (மசித்தது) 5. லோல்லோ ரோஸ்ஸோ கீரை இலைகள் – 4

தேன் மற்றும் மிளகாய் அலங்காரம்: 6. தேன் – 2 டீஸ்பூன் 7. எலுமிச்சை தோல் துறுவல் – 1 தேக்கரண்டி 8. சிவப்பு மிளகாய் – 1 9. எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் 10. கருப்பு மிளகு – சுவைக்கு தகுந்த படி 11. உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க செய்ய வேண்டிய செய்முறை : 1. சிவப்பு மிளகாயை நீளவாக்கில் நடுவாக வெட்டி அதில் உள்ள மிளகாய் விதைகளை நீக்கி மிளகாயின் காரத்தை குறைக்க வேண்டும்.

அலங்கரிக்க செய்ய வேண்டிய செய்முறை : 3.மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். அதன் பின்னர் அதில் தேன் சேர்க்க வேண்டும். 4. அதன் பின்னர் அதில் எலுமிச்சை தோல் துறுவலை சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் நொறுக்கப்பட்ட கருப்பு மிளகை சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும்.

சாலட் செய்முறை : 6. ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் அக்ரூட் பருப்புகளைப் போட்டு நன்கு சூடாக்க வேண்டும். பருப்புகள் நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

சாலட் செய்முறை :
7. அன்னாசி, பேரிக்காய், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, ஆகிய அனைத்து பழங்களையும் உங்கள் விருப்பம் படி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். 8. ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்து பழங்களையும் எடுத்து அதன் மீது நீங்கள் முன்பு அலங்கரிக்க தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

சாலட் செய்முறை : 9. ஒரு பரிமாறும் தட்டை எடுத்து அதில் கீரையை விரித்து அதன் மீது பழங்களைப் பரப்பி அதன் மீது இறுதியாக சில வறுக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை வைத்து அழகுபடுத்த வேண்டும். 10. உங்களின் சுவை மிகுந்த தேன் மற்றும் மிளகாய் வைத்து அலங்கரிக்கப்ட்ட ப்ரூட் சாலட் பறிமாறத் தயாராக உள்ளது.

drutsalad 14 1479103893

Related posts

ஆண்மை அதிகரிக்கும் பழங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…தப்பித் தவறிகூட இந்த காய்கறிகளை இரவு நேரத்தில் சாப்பிடாதீங்க?

nathan

தினசரி உணவுகளில் சேர்க்கப்படும் இந்த இரசாயனங்களால் உயிருக்கே ஆபத்தாம்…

nathan

சேலம் ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கிரீன் டீ குடிக்கலாமா..?

nathan

இடுப்பு எலும்பை வலுப்படுத்தும் வெந்தயக்களி

nathan

சுவையான வெள்ளரிக்காய் சட்னி

nathan

பூசணி விதையின் நன்மைகள் (Poosani Vithai Benefits in Tamil)

nathan

பச்சை பயறு அதிக சத்துக்கள் சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். ..

nathan