குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
காரசாரமான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி
தேவையான பொருட்கள் :
பென்னே பாஸ்தா – 200 கிராம்,
குடைமிளகாய் – 1
கேரட், பீன்ஸ் – 1/4 கப்,
வெங்காயம் – 2
தக்காளி – 2
காலிஃப்ளவர் – 1/4 கப்
கொத்தமல்லி – 1/2 கட்டு
புதினா – 1/2 கட்டு
தயிர் – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.
தாளிக்க.
எண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – 2 டீஸ்பூன்,
பட்டை – 2,
கிராம்பு – 2,
பிரிஞ்சி இலை – 2.
செய்முறை :
* குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பென்னே பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் பரத்தவும்.
* கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
* இப்போது மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
* காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.
* மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும்.
* நன்றாக கலந்து மசாலா பாஸ்தாவில் நன்றாக கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
* சூப்பரான பாஸ்தா பிரியாணி ரெடி.
* சிப்ஸ், பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.