31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026
சைவம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ்

கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு மோர்க்கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ்
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 100 கிராம்,
மோர் – 150 மில்லி,
சின்ன வெங்காயம் – 10,
சீரகம் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை :

* கம்பு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்த கம்பு மாவு, உப்பு, சீரகம் சேர்த்துக் கூழாக காய்ச்சவும். கைவிடாமல் கிளற வேண்டும். அப்போது தான் கட்டியில்லாமல் அடிபிடிக்காமல் இருக்கும்.

* காய்ச்சிய கூழை ஆற வைத்து, மோர் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

* கலக்கிய கூழில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பருகவும்.

* சூப்பரான சத்து நிறைந்த கம்பு மோர்க்கூழ் ரெடி.

Related posts

தேங்காய்ப்பால் புளியோதரை

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல்

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை

nathan

வெஜ் குருமா

nathan

மேங்கோ கர்டு ரைஸ்

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

ஆரஞ்சு தோல் குழம்பு

nathan

சின்ன வெங்காய குருமா

nathan