28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான கோதுமை ரவை டோக்ளா

கோதுமை ரவையை வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் எளிமையானது.

சூப்பரான கோதுமை ரவை டோக்ளா
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – ஒரு கப்,
பச்சை மிளகாய் – ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு,
கொத்தமல்லி (நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன்,
புளித்த தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்,
ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் – சிறிதளவு,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
பொடித்த சர்க்கரை – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


201704210908033261 Broken Wheat Dhokla. L styvpf
செய்முறை :

* கோதுமை ரவையை சிறிது எண்ணெயில் லேசாக வறுத்தெடுக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு. உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்க்கவும்.

* இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து அரை மணிநேரம் ஊறவிடவும்.

* ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும். இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். வெந்ததும வெளியில் எடுத்து ஆறவைத்து துண்டுகள் போடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகை எண்ணெயில் வெடிக்க விட்டு இதன் மேலே பரவலாக போடவும்.

* அடுத்து அதன் மேல் கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.

* பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக தெளிக்கவும்.

* கோதுமை ரவை டோக்ளா தயார்.

* இதை புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.

Related posts

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

ஃபுரூட் கேக்

nathan

வெண் பொங்கல்

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி

nathan

சோயா தட்டை

nathan