25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201704211524434507 evening tiffin ragi aloo poori SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு ஆலு பூரி செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 2 கப்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு – 2
ரவை – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையுடன் கேழ்வரகு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, எண்ணெய் 1 ஸ்பூன், அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை பூரியாக உருட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள பூரி மாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சத்தான மாலைநேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி ரெடி. 201704211524434507 evening tiffin ragi aloo poori SECVPF

Related posts

உளுந்து வடை

nathan

போளி

nathan

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan

சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்…

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி

nathan

சுவையான பட்டாணி தோசை

nathan

கார்ன் சீஸ் டோஸ்ட்

nathan

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

nathan

சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

nathan