25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
மருத்துவ குறிப்பு

ஆரோக்கியமா இருக்கணுமா… குடும்பத்தோட நேரம் செலவழியுங்க…

நல்ல உணவுமுறை. உடற்பயிற்சி. போதுமான தூக்கம். உடல்நலத்தைப் பாதுகாக்க இவையெல்லாம் அவசியம் என்பது நமக்குத் தெரியும்தான். ‘இந்தப் பட்டியலில் நாம் கற்பனை செய்தும் பார்த்திராத பல சின்னச்சின்ன விஷயங் களும் உண்டு. அவற்றில் ஒன்று குடும்பத்துடன் நேரம் செலவழித்தல்’ என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அலபாமா, டெக்ஸாஸ், கரோலினா என அமெரிக்கா முழுவதும் சாம்ராஜ்யம் பரப்பியிருக்கும் சவுத் யுனிவர்சிட்டி இதுகுறித்த ஆய்வு செய்துள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடும்போது உறவுகள் மேம்படுவதைப் போலவே, உடல்நலமும் மேம்படுகிறது என்று இதில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆய்வின் ஒரு பகுதியாக, இரவு உணவை குடும்பத்துடன் சாப்பிடுகிறவர்களையும், தனியாக உண்கிறவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.

இதில் குடும்பத்துடன் இரவு உணவு உண்கிற குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் குறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். இதையே சவுத் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தங்களது பரிந்துரையாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். Parents magazine இதழும் இந்த விஷயத்தை சிறப்புக் கட்டுரையாக முன்வைத்திருக்கிறது. குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, குழந்தை களுடன் விளையாடுவது போன்ற செயல்கள் பெற்றோர், குழந்தைகள் இரண்டு தரப்புக்குமே நல்லது செய்யும்.

முக்கியமாக, குழந்தைகளின் கல்வித்திறனை அதிகரிப்பது உட்பட அவர்களின் எதிர்காலத்துக்கும் பல வழிகளில் நல்லது செய்யும் என்று சொல்லியிருக்கிறது. பெற்றோருடன் நெருக்கமாக வளர்கிற குழந்தைகள் போதைப் பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அவசர வாழ்க்கைதான். சம்பாதித்தாக வேண்டும்தான். டென்ஷன்தான்…

காரணம் ஆயிரம் இருந்தாலும் குடும்பத்துக்கென்று கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள். அது உடல்நலம், மனநலம் மட்டுமின்றி நீங்கள் நினைத்திராத எண்ணற்ற பலன்களையும் தரும் என்று ஆய்வின் முடிவாகக் கூறுகிறார்கள். அதற்காக, குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறேன் பேர்வழி என்று டிவி, செல்போன், லேப்டாப் என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். Quality time என்று சொல்கிற அளவுக்கு குடும்பத்துடன் செலவழிக்கிற நேரம் முழுமையானதாக இருக்கட்டும்!

Related posts

உங்க உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைத்தால் என்னாகும் தெரியுமா! மருத்துவர் கூறும் தகவல்கள்..

nathan

கவலை வேண்டாம்… வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! இதயத்தை பலப்படுத்தணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

சூப்பரா பலன் தரும்!! கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் இதோ!

nathan

கர்ப்பப்பை புற்றுநோயின் தாக்கம்

nathan

இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்!

nathan

ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு

nathan

நீங்கள் பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?அப்ப இத படிங்க!

nathan

இந்த பகுதியில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்கவும்

nathan