உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகாரம் வழங்கி உள்ளது. ‘Dengvaxia’ என்னும் இந்தத் தடுப்பூசி, ஒன்பது வயதைக் கடந்தவர்களுக்கு வருடத்துக்கு மூன்று முறை அளிக்க முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது. 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக ‘Dengvaxia’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
dengvaxia
கொசு மூலமாகப் பரவும் டெங்கு காய்ச்சலால் ஓர் ஆண்டுக்கு 390 மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோஃபி என்ற நிறுவனம், டெங்கு நோய்க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டது.
கடந்த 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக ‘Dengvaxia’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளதால், உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.