27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
de1c9de0 52e8 444b a85f d6dcc8728667 S secvpf
ஆரோக்கிய உணவு

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.
தென்னிந்திய உணவு வகை,
வட இந்திய உணவு வகை.
தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள்.
அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.
இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று.
இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம் நன்கு வெண்மையாகவும் காணப்படும்.
இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும்.
பணப்பயிர்களில் இதுவும் ஒன்று. உளுந்து மிகவும் சத்து வாய்ந்த ஒரு பொருளாகும். கிராமங்களில் பருவம் அடைந்த பெண்களுக்கு உளுந்து களி, நல்லெண்ணெய் கலந்த கருப்பு உளுந்து மாவு உட்பட உளுந்தில் செய்த பலகாரங்கள், பட்சணங்கள் அதிகம் பெரியவர்கள் செய்து கொடுப்பர்.
இதற்கு காரணம் உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துதான். பருவமடைந்த நேரத்தில் பெண்கள் உடல் சோர்வால் அவதிப்படுவர். உளுந்து உடலுக்கு ஊட்டம் கொடுத்து மனதையும் உடலையும் வலுவாக்கும் தன்மை உள்ளது.de1c9de0 52e8 444b a85f d6dcc8728667 S secvpf

Related posts

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்

nathan

முளைகட்டிய தானியங்கள் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாட உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan

உங்களுக்கு ஒரே வாரத்தில் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…வைரஸை எதிர்க்கும் அன்றாட உணவுப் பொருட்கள்

nathan

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

nathan

தினமும் ஏன் ஆப்பிள் சாப்பிட வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புதங்கள்

nathan