30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201704171111238219 how to make ragi upma SECVPF
ஆரோக்கிய உணவு

காலையில் சத்தான டிபன் ராகி உப்புமா

ராகியைக் கொண்டு ராகி தோசை, ராகி புட்டு, ராகி உப்புமா போன்றவை செய்யலாம். இன்று ராகி உப்புமாவை எப்படி மிகவும் ஈஸியான முறையில் செய்வதென்று பார்க்கலாம்.

காலையில் சத்தான டிபன் ராகி உப்புமா
தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ராகி மாவை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகத்தை போட்டு தாளித்த, பின் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மெதுவாக ராகி மாவை சேர்த்து தொடர்ந்து கைவிடாமல் கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்.

* தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதனை இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால் ராகி உப்புமா ரெடி!!!201704171111238219 how to make ragi upma SECVPF

Related posts

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!….

sangika

உங்களுக்கு தெரியுமா நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள இந்த பொருள் போதும்..!

nathan

சுவையான காளான் தக்காளி ரொட்டி

nathan

சூப்பரான கடலை மாவு வெந்தயக்கீரை ரொட்டி

nathan

சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ்

nathan

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. சுண்டைக்காயின் குணநலன்கள்!

nathan

அவசியம் படிக்கவும்!இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்!உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது இப்படி செய்தால் சுவை கூடும்..!

nathan