29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld816 1
ஆரோக்கிய உணவு

காளானில் ஆயிரம் நன்மை!

காளானை முதன் முதலாக உணவாகச் சாப்பிட்டவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான். அமெரிக்கர்களை விட ஐரோப்பியர்கள் காளானை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது தென் அமெரிக்காவின் முனையில் உள்ள டைரா லெபியுகோ எனும் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக காளான் விளங்குகிறது.

இவர்களை போல வேறெந்த நாட்டிலும் காளானை அரிசி, கோதுமை போல் முக்கிய உணவாகப் பயன்படுத்தும் பழக்கமில்லை. இந்தியாவில் எட்டு வகை காளான்கள் உள்ளன. இதில், மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என மூன்று வகை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உடல் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அவசியம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளன. இவை இரண்டும் கொலஸ்டிரலை இரத்தக் குழாயில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்தும்.
100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. காளானில் கொழுப்புச்சத்து இல்லாததால், பயமின்றி சாப்பிடலாம். உடலுக்கு புரதமும், தேவையான சக்தியும் கிடைக்கும். கொலஸ்டிரால் சேரும் என்கிற பயமும் இல்லை. இதனால் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் தாக்கும் அபாயம் குறைவு.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு காளான் உணவு நல்லது. காளானில் செரிமானத்தை அதிகப்படுத்தும் அமிலங்கள் அதிகமுள்ளன. இதனால், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நல்லது. மேலும், உடல் வளர்ச்சிக்கு தேவையான எட்டு வகையான அமினோ அமிலங்களும் உள்ளன.
காளானில் புரதம் மட்டுமின்றி இரும்புச்சத்து மற்றும் பலவிதமான வைட்டமின்களும் உள்ளன.
மருத்துவக் குணங்களும் அதிகமுள்ளன. காளானில் ஆரஞ்சுப்பழத்தைவிட 4 மடங்கும், ஆப்பிள் பழத்தைவிட 12 மடங்கும், முட்டைக் கோஸைவிட இரு
மடங்கும், புரதச்சத்தும், மருத்துவக் குணங்களும் நிரம்பியுள்ளது. காளானில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் பி, டி, இ ஆகியன ஓரளவுக்கு உள்ளது. முக்கியமாக வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாக காளான் சூப் கைகொடுக்கும். வயிறு மற்றும் ஆசனப்புண் குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் சமைத்துச் சாப்பிடலாம். காளான், முட்டைகோஸ், பச்சை பட்டாணி ஆகிய மூன்றையும் தினசரி சமையலில் சேர்க்க வேண்டும்.
இதனால், உடல் ஆரோக்கியத்துக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகிறது.
அனைத்து வயதினரும் இருநாட்களுக்கு ஒருமுறை காளான் சூப் அருந்துவது நல்லது. மட்டன் பிரியர்கள் காளான் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. உடலில் கொலாஸ்டிரல் சேராது. இக்காரணங்களினால் உலகம் முழுவதும் காளான், விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது.
தாய்பாலை வற்றச் செய்ய, காளான் சூப் சாப்பிட துவங்கலாம். தொடர்ந்து சாப்பிட்டால் ஒரே வாரத்தில் தாய்ப்பால் வற்றிவிடும். இதய நோயாளிகள் வலி குறைந்து உற்சாகமாக இருக்க, காளான் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இச்சிறப்புமிக்க காளான்களை தினசரி உணவில் சேர்த்து, உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை இலவசமாக பெற்றிடலாம்.ld816 1

Related posts

அதிகப்படியா ஆரஞ்சு சாப்பிடுவது உங்களுக்கு எந்த மாதிரியான பக்க விளைவை ஏற்படுத்தும்

nathan

செரிமாணத்தை ஏற்படுத்தும் இஞ்சி சாதம்

nathan

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி

nathan

இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்!…

sangika

உங்களுக்கு தெரியுமா இத சாப்பிட்டா இரும்புச்சத்து குறைபாடு எப்பவுமே வராது!

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் சப்ஜா

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan

கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் அற்புத காய்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan