கோடை காலத்தில் மாங்காய் அதிகளவு கிடைக்கும். இன்று மாங்காய் வைத்து அனைவருக்கும் விருப்பமான சூப்பரான பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இனிப்பு புளிப்பு சுவையுடன் மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள் :
புளிப்பு மாங்காய் – 1,
வெல்லம் – 150 கிராம்,
உப்பு – சிறிதளவு,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
தாளிக்க :
எண்ணெய், கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்-2 போன்றவை.
செய்முறை :
* மாங்காளை பொடியாக நறுக்கி கொள்ளவும், அல்லது துருவிக் கொள்ளவும்
* வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகளை போட்டு நன்கு வதக்கி சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்.
* பின் நறுக்கிய வெல்லம், சிறிது உப்பு போட்டு கிளறி கட்டியாகும் வரை அடுப்பில் வைத்து பின் இறக்கி விடவும்.
* மாங்காய் பச்சடி ரெடி.