27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த அவரைக்காய்

அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும்.

அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்/

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.common news images

Related posts

எதை எதை எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?

nathan

நீங்கள் உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!

nathan

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடிங்க? அப்புறம் தெரியும் மாற்றம்

nathan

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!

nathan

தயிர் தினமும் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்குமா?தெரிந்துகொள்வோமா?

nathan

புதினா இலையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?தெரிந்துகொள்வோமா?

nathan

பொரி சாப்பிட்டா இவ்வளவு பலன் இருக்கா?

nathan

தெரிஞ்சிக்கோங்க… முருங்கைக்காய் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?

nathan