29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
03 1441274413 5healthyfactsaboutyourfavouriteindianfood
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு பிடித்த இந்திய பாரம்பரிய உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள்!!!

இன்று கெ.எப்.சி, டோனட்ஸ், சான்ட்விச் போன்ற உணவுகளை சாப்பிடுபவர்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் இது. அறுசுவை உணவை ருசிக்க மட்டும் சமைத்தவர்கள் அல்ல நமது முன்னோர்கள். அதை மருந்தாக உட்கொண்டவர்கள்.

1990-கள் வரை நமது நாட்டில் வயல்வெளிகள் அதிகமாகவும், மருத்துவமனைகள் குறைவாகவும் தான் இருந்தன. கடந்த 25 ஆண்டுகளில் ஐ.டி-யில் புரட்சி செய்கிறோம் என்ற பெயரில், நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை சீர்குலைத்துவிட்டோம், நமது உடல்நலத்தையும் சேர்த்து.

ஆயிரம் பொறியியலாளர்கள் வேலை இழந்ததை பெரிதாய் பேசிய நாம், இலட்சம் விவசாயிகள் இறந்ததை பற்றி யோசிக்க கூட இல்லை. விவசாயம் நமக்கு அளித்த, அளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பிடித்த இந்திய பாரம்பரிய உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…

சப்பாத்தி / ரொட்டி வட இந்திய மக்களின் தினசரி உணவு சப்பாத்தி, ரொட்டி. எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடப்படும் இந்த உணவு உடல் வலிமைக்கு மிகவும் சிறந்த உணவு. சக்தியை அதிகரிக்க சப்பாத்தி உதவுகிறது. உடல் எடை குறைக்க ஓர் சிறந்த உணவு சப்பாத்தி / ரொட்டி ஆகும்.

வெள்ளை சாதம் சப்பாத்தி எப்படி வட இந்தியர்களுக்கோ, அப்படி தான் சாதம் தென்னிந்தியர்களுக்கு. இது ஒரு பிரதான உணவு. சுட சுட சாப்பிட்டாலும் சரி, நீரூற்றி மறுநாள் நீராகாரமாக சாப்பிட்டாலும் சரி, நிறைய உடல் சக்தியை தரவல்லது சாதம். இதை விட கைக்குத்தல் அரிசி மேலும் ஆரோக்கியமானது.

கூட்டு உணவுகள் பல காய்கறிகளை சேர்த்து சமைக்கும் இந்திய கூட்டு உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இவை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை ஒரே உணவின் மூலமாக தரக்கூடியவை.

தயிர்
தயிரில் இருக்கும் கால்சியம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. அதனால் தான் உணவின் கடைசியில் கட்டாயம் தயிர் சேர்க்கும்படி நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.

பயிறு வகை
உணவுகள் பயிறு வகை உணவுகள் பெண்களுக்கு மிகவும் முக்கியமான உணவு. தினசரி பயிறு வகை உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணலாம். பயிறு உணவுகளில் போலேட், வைட்டமின் பி1 மற்றும் மினரல்ஸ் நிறைய இருக்கின்றன.

வரமிளகாய் சிவப்பு மிளகாய் அல்லது வரமிளகாய். இதில் வைட்டமின் ஏ, பி, சி போன்றவை அதிகம் இருக்கின்றன. வரமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியுமாம். அதாவது கொழுப்பு அதிகமாக சேராமலும், உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்க முடியும்.

பன்னீர் பன்னீரில் கொழுப்பு இருக்கிறது என பலரும் சாப்பிட மறுப்பதுண்டு. இது உண்மை எனிலும் கூட, இந்திய உணவுகளில் ருசியும், ஆரோக்கியமும் அதிகம் இருக்கும் உணவும் பன்னீர் தான். இதில், கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. இது உடல் நலனையும் அதிகரிக்கவும், எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமலும் இருக்கவும் உதவுகிறது.

இட்லி உலகின் சிறந்த ஆரோக்கியமான உணவென்று பெயர்பெற்றது இட்லி. கொழுப்புச்சத்து இல்லாத உணவு. இதில் புரதம் இருக்கிறது. செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்க உதவும் உணவு இட்லி.

கறிவேப்பிலை சாம்பார் முதல் ரசம் வரை அனைத்து உணவிலும் நாம் சேர்க்கும் உணவுப் பொருள் கறிவேப்பிலை. இதிலுள்ள இரும்புச்சத்து உடல்நலனை அதிகரிக்க, நோய் எதிர்ப்பை வலுவாக்க உதவுகிறது.

03 1441274413 5healthyfactsaboutyourfavouriteindianfood

Related posts

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிச்சு பாருங்க நன்மைகள் ஏராளமாம்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்…

nathan

ஓமம் மோர்

nathan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

சுவையான தேங்காய் பால் முட்டை குழம்பு

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி தொந்தரவுக்கு தீர்வு தரும் பூண்டு மஞ்சள் பால்

nathan

தெரிஞ்சிக்கங்க…வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

nathan

மலச்சிக்கலை போக்கும் கொய்யா சூப்பர் டிப்ஸ்….

nathan

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan